ஒரு நாளைக்கு எத்தனை முறை உணவை உட்கொள்ள வேண்டும்?
மனிதர்கள் ஒரு நாளைக்கு இத்தனை முறை உணவை உட்கொள்ள வேண்டும் என்ற எந்த விதிமுறையும் இயற்கையில் கிடையாது. சுயமாக பசி உண்டானால் பசியின் அளவுக்கு உணவை உட்கொள்ள வேண்டும், இதுதான் இயற்கையின் அமைப்பு.
ஒரு நாளைக்கு 3 முறை உணவை உட்கொள்ள வேண்டும் என்பது மனிதர்களின் தவறான புரிதலாகும். உடலுக்கு உணவு தேவைப்படும் போது பசி உண்டாகும். பசி உண்டாகும் போது உணவை உட்கொண்டால் போதும்.
பசி உண்டாகவில்லை என்றால், உணவை உட்கொள்ளத் தேவையில்லை. ஒரு நாளைக்கு 1 தடவை தான் பசி உண்டாகிறது என்றால் ஒரு தடவை உணவை உட்கொண்டால் போதுமானது.