ஆரோக்கியம்

ஆர்கானிக் உணவுகள் பாதுகாப்பானாதா?

bunch of vegetables
#image_title

ஆர்கானிக் உணவுகள் பாதுகாப்பானாதா? ஆர்கானிக் உணவுகள் என்றால் என்ன? பூச்சிக்கொல்லி விஷம் மற்றும் இரசாயனம் தெளிக்கப்படாத உணவுகள். சரி, பூச்சிக்கொல்லியும் இரசாயனமும் இயற்கை விவசாயம் செய்பவர் தெளிக்கவில்லை, ஆனால் அவர் பயன்படுத்தும் இயற்கை உரத்தை உருவாக்க பயன்படும் ஆடு, மாடு, கோழி, வாத்து, பன்றிகளுக்குக் கொடுக்கப்படும் உணவுகளில் இரசாயனங்கள் கலக்கப்பட்டிருந்தால்? அந்த இரசாயனங்கள் அவர் பயன்படுத்தும் உரங்களிலும் இருக்கும் தானே? உரங்களில் இருக்கும் இரசாயனங்கள் பயிர்களிலும் கலக்கும் தானே? அது எப்படி முழுமையான ஆர்கானிக் உணவு ஆகும்?

உணவுகளை உற்பத்தி செய்த பின்னர், அவற்றை பொட்டலம் போட, கெட்டுப் போகாமல் தடுக்க, அவற்றை பாதுகாக்க என சிறிதளவேனும் இரசாயனம் கலக்கப்படும் தானே?

கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான ஆர்கானிக் உணவுகள், உண்மையான இயற்கை உணவு வகைகள் அல்ல. இரசாயனமும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் குறைவானவை, மனிதர்களுக்கு நேரடியான கெடுதல்களை செய்யாதவை என்று வேண்டுமானால் கூறலாம். இப்படி அனைத்து வகையான உணவிலும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் இரசாயனங்களும் கலக்கப்படும் போது இனி எவற்றை உட்கொள்வீர்கள்?

அவர் அதில் இரசாயனம் இருக்கும் என்று சொன்னார்! இவர் இதில் பூச்சிக்கொல்லிகள் இருக்கும் என்று சொன்னார்! என்று நாம் கூறலாம். எல்லாம் சரி, அனைத்திலும் பூச்சிக்கொல்லிகளும் இரசாயனங்களும் இருக்கும் போது, இனி எதை சாப்பிட வேண்டும் என்று அவர் கூறினாரா?

உலகத்தின் தலைச் சிறந்த உணவுகள் தேன், தேங்காய், பழங்கள், கருப்பட்டி ஆனால் இன்று இவை அனைத்திலும் கலப்படம், பூச்சிக்கொல்லி, மெழுகு, சரி இனி எவற்றைச் சாப்பிடுவது?

ஒவ்வொரு தனிநபர் உடலின் தன்மைக்கு ஏற்ப எளிதில் ஜீரணமாகக் கூடிய அனைத்து உணவுகளும் நல்ல உணவுகள், அவற்றை தாராளமாக உட்கொள்ளலாம். அதனால் அச்சத்தை விடுங்கள் ஆசைப்பட்டதை சாப்பிடுங்கள் ஆனால் பசியோடும் அளவோடும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X