ஒரே உலகம், ஒரே அரசாங்கம். உலகம் முழுமைக்கும் ஒரே ஆட்சியாளர்கள், ஒரே சட்ட திட்டம், ஒரே பயன்பாட்டு நாணயம், என்று கொண்டுவர வேண்டும் என்று பல நூறு ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளை ஆண்டு வரும் பெரிய குடும்பங்கள் முயல்கின்றன.
இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளும், போர்களும், படையெடுப்புகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரும் அதில் ஒரு பகுதிதான். வன்முறையின் மூலமாக உலகை இணைப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, மேலும் அதற்கு அதிக பொருள் செலவாகும் காரணத்தாலும் அவர்கள் அந்த வழிமுறையைக் கைவிட்டார்.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கோவிட் நாடகமும் உலகைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் நீட்சியாக இருக்கலாம். எனது கணிப்பு சரியாக இருந்தால் தற்போது அவர்கள் நிறைவேற்றத் துடிக்கும் திட்டம், உலகம் முழுவதையும் இணையமயமாக்கும் திட்டம்.
உலகம் முழுமைக்கும் உள்ள அரசாங்கங்களை ஏமாற்றியோ, மிரட்டியோ, லஞ்சம் கொடுத்தோ அவற்றை (டிஜிட்டல்) மின்னியல் மயமாக்குவது. மின்னியல் ஆக்கம் நிறைவு பெற்றதும் இணையம் மூலமாக அந்த அரங்கங்களைக் கண்காணிப்பது மற்றும் கட்டுப்படுத்துவது. தற்போது உலகம் முழுமைக்கும் பெரும்பாலான நாடுகள் மின்னியல் மயமாகி விட்டன. தற்போது இந்தியா கூட மின்னியலாக்கத்தை நோக்கி விரிகிறது. ஆதார் அட்டையை அனைவருக்கும் அவசியமாக்கியது ஒரு மிக முக்கியமான நகர்வு.
அடுத்ததாக மின்னியல் நாணயம், மின்னியல் பணப் பரிவர்த்தனை. இந்தியாவில் 500, 1000 ரூபாய்களைத் தடை செய்ததும், அனைவரும் கண்டிப்பாக வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும், அத்தனை பணப் பரிவர்த்தனைகளும் மின்னியல் முறையில் நடைபெற வேண்டும், ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேலாக ரொக்க பரிவர்த்தனை செய்யக்கூடாது, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலாக தங்கம் வைத்திருக்கக் கூடாது, என்றதும் அதற்காகத்தான்.
இந்த திட்டத்தின் மூலமாக முதலில் இந்திய அரசாங்கம் நன்மையடையும். முதலில் அரசாங்கத்திற்குத் தெரியாமல் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளைக் குறைக்கலாம். மக்களையும், அரசாங்கத்தை எதிர்க்கும் புரட்சியாளர்களையும் கட்டுப்படுத்தலாம். உதாரணத்திற்கு ஒருவர் அரசாங்கத்துக்கு எதிராகச் செயல்பட்டால், அந்த அரசாங்கம் அவரின் வங்கிக் கணக்குகளை முடக்க முடியும், சொத்துக்களை முடக்க முடியும் இதன் மூலமாக அவர் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுவார்.
ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, மற்றும் மற்ற அரசாங்க சலுகைகளை மின்னியல் முறையில் தடை செய்ய முடியும். இதன் மூலமாக அவரின் நடமாட்டம் தடைப்படும், நாட்டுக்குள்ளேயே அகதியாக வாழ்வார். பல நாடுகளில் இவை நடைமுறைக்கு வந்துவிட்டன. உலகை ஒரு குடைக்குள் ஆள நினைக்கும் கூட்டத்தின் பிடிக்குள் பொதுமக்களின் தகவல்கள் சென்றுவிட்டால், யாரும் அந்த அமைப்பை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது.
ஒரு நாட்டின் குடிமக்கள் அரசாங்கத்தின் அதிகார வட்டத்திற்குள் வருவதைப் போன்று மின்னியல் மயமாக்கப்பட்ட அரசாங்கங்கள் அனைத்தும் உலகை ஆளத் துடிக்கும் குழுவினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவார்கள்.