நோய்கள்

நோயும் மரணமும்

orange and white plastic bottle on white textile

நோயும் மரணமும். ஒரு முக்கியமான விசயத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நோய் வேறு, மரணம் வேறு, இவை இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை உடலின் தொந்தரவுகள். மனிதனுக்கு நோய் உண்டானால் அதனைச் சரி செய்ய வாய்ப்புகள் உள்ளன. சரியான மருத்துவம் செய்தால் அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்த முடியும். ஆனால் சிலருக்கு மரணம் நெருங்கும் வேளையில் உடலில் பாதிப்புகள் அல்லது நோய்கள் உண்டாகலாம். மரணம் உண்டாகக் காரணம் தேவையல்லவா?

உடலில் உண்டாகும் பலவீனங்களினாலும், உடலில் சேரும் கழிவுகளினாலும், நோய்களோ இயக்க பாதிப்புகளோ உண்டானால் அவற்றைச் சரி செய்யலாம். மரணத்தை உண்டாக்க உடலில் நோய்களோ இயக்க பாதிப்புகளோ உருவானால் அவற்றைச் சரி செய்ய யாராலும் முடியாது. எத்தனை கோடி செலவு செய்தாலும் மரணத்தில் தான் முடியும். வேண்டுமென்றால் மரணத்தை ஒரு சில நாட்கள் தள்ளிப் போடலாம் ஆனாலும் அந்த நோயாளிக்கு மரண வேதனை மட்டுமே மிஞ்சும்.

நோயாளியின் வயதையும், உடலின் தன்மையையும், உடலின் இயக்கத்தையும், மனதின் இயக்கத்தையும், கணக்கில் கொண்டு, அது நோயா அல்லது மரணத்தின் அறிகுறியா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையின் தூண்டுதலை மன நிறைவுடன் ஏற்றுக்கொண்டால் நோயாளியின் குடும்பமும் நிம்மதியாக இருக்கும் நோயாளிக்கும் நிம்மதியான மன நிறைவான மரணம் உண்டாகும். சிலர் முதியவர்களின் விவரங்களை எனக்கு அனுப்பி அவர்களுக்கு ஹீலிங் செய்து எப்படியாவது காப்பாற்றுங்கள் என்பார்கள். எனக்கு ஆச்சரியமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். என்பது தொண்ணூறு வயதில் கூட மனிதர்கள் மரணிக்கக் கூடாது என்று சிலர் எண்ணுகிறார்கள்.

மரணத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. பழைய செருப்பை மாற்றுவதைப் போன்று, மரணம் என்பது வெறும் உடலை மாற்றும் செயல் மட்டுமே. மரணத்தைத் தூண்டக்கூடிய உடலின் தொந்தரவாக இருந்தால் அந்த நோயாளி அமைதியாக நிம்மதியாக உடலை நீக்க உதவி செய்ய வேண்டும். உயிர் நிம்மதியாகப் பிரியும் வகையில் சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும். அதை விடுத்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினால் வலியும் வேதனையும் கூடிய மரணம் தான் மிஞ்சும். இயற்கையை யாராலும் வெல்ல முடியாது. அத்துடன் சேர்த்து மருத்துவச் செலவுகள் என்ற பெயரில் செல்வமும் கரையும்.

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X