நோயாளிகளுக்கு குமட்டல் உணர்வு உண்டாவது ஏன்?
நோயாளிகளுக்கும், உடல் பலவீனமாக இருப்பவர்களுக்கும், குமட்டல் உணர்வு உண்டானால் உடலில் நோயைக் குணப்படுத்தும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன, அல்லது உணவை ஜீரணிக்கும் தன்மையில் உடல் இல்லை என்று பொருளாகும்.
இதை புரிந்துக் கொண்டு, தானாக பசி உண்டாகும் வரையில் உணவு உட்கொள்வதைத் தள்ளிப்போட வேண்டும். எந்த காரணத்தைக் கொண்டும் நோயாளிகளுக்கு வற்புறுத்தி உணவு கொடுக்கக் கூடாது. மீறி உணவு கொடுத்தால் அவர்களின் நோய்கள் தீவிரமாகக் கூடும், நோய்கள் குணமாக கால தாமதமாகும்.