நோய்கள்

நோயாளிகள் உட்கொள்ளும் மாத்திரைகள் அதிகரிப்பது ஏன்?

நோயாளிகள் உட்கொள்ளும் மாத்திரைகள் அதிகரிப்பது ஏன்? சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் ஒரு மாத்திரையிலிருந்து தான் தொடங்குகிறார்கள். ஆனால் மாத்திரைகளை உட்கொள்ளத் தொடங்கிய சில மாதங்களிலேயே மாத்திரைகளின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்து, சில வருடங்களுக்குப் பிறகு அதிகமான மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. தொடக்கத்தில் ஒரு மாத்திரைக்குக் கட்டுப்பட்ட சர்க்கரை சில காலங்களிலேயே பல மாத்திரைகள் உட்கொண்டும், கட்டுப்படுவதில்லை. ஏன் இந்த சூழ்நிலை உருவாகிறது?

மாத்திரைகள் நோய்களைக் குணப்படுத்துகின்றன என்பது உண்மையானால், மாத்திரைகளை உட்கொள்ளத் தொடங்கிய நாளை விட பின்னாட்களில் மாத்திரைகளின் எண்ணிக்கை குறைய வேண்டும் அல்லவா? மாத்திரைகளின் எண்ணிக்கை குறையாவிட்டாலும் அதிகரிக்காமலாவது இருக்க வேண்டும் அல்லவா? மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது நோய் குணமாகவில்லை, நோய் மேலும் தீவிரமடைகிறது என்பதற்கு அத்தாட்சியல்லவா? சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி பெரும்பாலான நோயாளிகள் உட்கொள்ளும் மாத்திரைகளின் எண்ணிக்கை நாள்பட அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதற்கு என்ன காரணம்?

நோயாளிகளுக்கு மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதற்குக் காரணம் அவர்களின் உடல் அந்த மாத்திரைகளை எதிர்த்துப் போராடத் தொடங்கிவிட்டது.

நாம் தினமும் உணவுகளை உட்கொண்டு வருகிறோம். இத்தனை ஆண்டுகள் மீண்டும் மீண்டும் அதே உணவுகளை உட்கொண்டும், உடல் அந்த உணவுகளை வெறுக்கவில்லை. நாம் உண்ணும் இட்லியோ, தோசையோ, சப்பாத்தியோ, சாதமோ, கஞ்சியோ, எதுவாக இருந்தாலும் உடல் இன்று வரையில் அந்த உணவை வெறுக்கவில்லை. அந்த உணவினை பார்க்கும்போதோ உண்ணும் போதோ நமக்கு வெறுப்பு தோன்றுவதில்லை.

ஆனால் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளத் தொடங்கிய சில மாதங்களிலேயே; உடல் அந்த மருந்து மாத்திரைகளை வெறுக்க தொடங்குகிறது பின் அவற்றை எதிர்த்துப் போராடத் தொடங்குகிறது. தொடக்கத்தில் நோய்களைப் பற்றிய பயத்தினால் மருந்து மாத்திரைகளை வேறு வழியின்றி உடல் ஒப்புக் கொள்கிறது. அந்த மாத்திரைகளை உட்கொள்ளத் தொடங்கிய பிறகு, அவற்றினால் விளையக்கூடிய கேடுகளையும் பக்கவிளைவுகளையும் உணர்ந்துகொண்டு உடல் அந்த மருந்து மாத்திரைகளை ஏற்க மறுக்கிறது. அதனால்தான் நோயாளிகள் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளத் தொடங்கிய நாட்களில் இருந்ததை விடவும் மாத்திரைகளில் எண்ணிக்கை அதிகரிக்கிறது அல்லது மாத்திரைகளின் வீரியம் அதிகரிக்கிறது.

ஒரு வேளை மருந்து மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால் நோய்கள் குணமாகுமா? என்றால் அதுவும் கிடையாது. மரணம் வரையில் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு கொண்டே உயிர் துறக்கிறார்கள். இதிலிருந்து உங்களுக்குப் புரியவில்லையா மருந்து மாத்திரைகள் நோய்களைக் குணப்படுத்துவது இல்லை என்பது. ஆங்கில மருத்துவம் மட்டுமல்லாமல் அனைத்து மருத்துவங்களையும் சேர்த்துத் தான் பேசுகிறேன். உங்கள் உடல்தான் நோய்களைக் குணப்படுத்தும், அதனால் உடல் சொல்வதை மட்டும் கேளுங்கள்

உடலுக்கென்று சுயமாக அறிவு இருக்கிறது. எது தேவை எது தேவையில்லை, எது நல்லது எது கெட்டது, எது ஒத்துக்கொள்ளும் எது ஒத்துக்கொள்ளாது என்பதைப் பிரித்துப் பார்க்கும் ஆற்றல் உடலுக்கு உள்ளது. உடலுக்கு எல்லாம் தெரியும். உடல் சொல்வதை மட்டும் கேட்டு நடந்தால், அனைத்து நோய்களும் தானாக குணமாகும்.

உடல் பேசும் முக்கியமான மொழிகளான பசி, தாகம், சோர்வு, தூக்கம், மற்றும் மலம் சிறுநீர், கழித்தல் இவற்றைத் தெளிவாக புரிந்துகொண்டு உடல் கேட்கும் நேரத்தில், இந்த விசயங்களை நிறைவேற்றி வைத்தால், அனைத்து நோய்களும் குணமாகும். பசியில்லாமல் உண்ணாதீர்கள், தாகம் இல்லாமல் தண்ணீர் அருந்தாதீர்கள், சோர்வு உண்டானால் உடலுக்கு ஓய்வு கொடுங்கள், இரவில் விரைவாக படுக்கைக்குச் செல்லுங்கள், சிறுநீர் மலம் தடுக்காதீர்கள், மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அத்தனை நோய்களும் சுயமாக குணமாகும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field