நோன்பு என்றால் என்ன?
இஸ்லாமிய மார்க்கத்தில் நோன்பு என்பது சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரையில் உணவோ தண்ணீரோ பருகாமல் இருப்பது. சூரிய உதயமும் அஸ்தமனமும் நாட்டுக்கு நாடு மாறுபடுவதால், நோன்பு வைக்கும் கால அளவு ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும்.
உடலைத் தூய்மைப்படுத்தவும், மனதைப் பக்குவப்படுத்தவும், இறையச்சத்தை உருவாக்கவும், ஒழுக்கமான பண்புகளை வளர்க்கவும், பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.