நோய்கள்

நோய்க்கும் மரணத்துக்கும் சம்பந்தம் கிடையாது

நோய்க்கும் மரணத்துக்கும் சம்பந்தம் கிடையாது, நோய் வேறு மரணம் வேறு. மரணம் முதுமையில் தான் வரவேண்டும் அல்லது நோய் உண்டானால் தான் மரணம் உண்டாகும் என்று இயற்கையில் எந்த வரைமுறையும் கிடையாது. மரணம் என்பது அனைவருக்கும் வந்தே தீரும். மரணமடைவதற்கு என்று எந்த வயது வரையறையும் கிடையாது.

நோய்கள் உயிரைக் கொல்லும் என்பது வெறும் கட்டுக்கதையே. நோய்வாய்ப்பட்ட எல்லோரும் மரணமடைவதில்லை. நோய்கள் உண்டாகி, நோய்களின் காரணமாக மரணமடைபவர்கள் மிகக் குறைவே. நோய் உண்டானதும், நோயை எண்ணி உண்டாகும் அச்சத்தினால் மரணமடைபவர்கள் தான் அதிகம்.

நாம் சற்று வேறொரு கோணத்தில் இருந்து இதைப் பார்ப்போம். நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தவர்களை; மரணமடைவதற்கு சில காலங்களுக்கு முன்பாக நோய்வாய்ப்பட்டார்கள் என்று கூறலாம். காரணம், இது தான் உண்மை. மரணம் வேறு நோய் வேறு. இவை இரண்டையும் முடிச்சுப்போட்டு பார்த்து மக்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்.

ஒருவருக்கு ஏதாவது ஒரு நோய் உண்டானால் அதைக் குணப்படுத்துவது தான் ஒரு மருத்துவரின் வேலை. நோய் குணமாக வேண்டுமென்றால் முதலில் நோயாளியின் மனதில் தைரியத்தை விதைக்க வேண்டும், அடுத்ததாக நோய் குணமாகும் என்ற நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும், கடைசியாகத்தான் சிகிச்சை வழங்க வேண்டும். மன தைரியமும், நோய் குணமாகும் என்ற நம்பிக்கையும் மட்டும் இருந்தாலே அனைத்து நோய்களும் பறந்து போய்விடும்.

இந்த உலகில் குணப்படுத்த முடியாத நோய்களே கிடையாது. ஒரு மருத்துவரால் குணப்படுத்த முடியாமல் போனாலும் அடுத்தவர் குணப்படுத்த வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நோயாளி மட்டும் மன தைரியத்தை இழந்து விட்டால், அவரை யாராலும் காப்பாற்ற முடியாது. அதனால் எந்த நோயும் குணமாகாது என்றும், இறந்துவிடுவீர்கள் என்றும் நோயாளிகளிடம் கூறாதீர்கள். என் மருத்துவரே குணமாகாது என்று கூறிவிட்டார் என்ற விரக்தி ஒன்று போதும் நோயாளிகளைக் கொல்வதற்கு.

நோயாளிகள் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் ஒன்றும் கடவுள்கள் அல்ல. ஒரு மருத்துவர் ஒரு நோய் குணமாகாது என்று கூறினால், அதன் வார்த்தைகளின் உண்மையான பொருள், “எனக்கு இந்த நோயை குணப்படுத்தத் தெரியாது” என்பதே. அவர்களால் முடியாவிட்டாலும் அந்த நோய்களைக் குணப்படுத்துவதற்கு யாராவது இருப்பார்கள் தேடிப்பாருங்கள். எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள். நிச்சயமாக எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும்.

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X