ஆரோக்கியம்

நோய்களின்றி வாழக் கற்றுக் கொள்ளுங்கள்

நோய்களின்றி வாழக் கற்றுக் கொள்ளுங்கள். இளமைக் காலம் முழுவதும் நாய் படாத பாடுபட்டு சிறுக சிறுக பணம் சேர்த்து அவற்றை அனுபவிக்காமல் முதுமை காலத்தில் பலர் மருத்துவ துறையின் இழந்து விடுகிறார்கள். நோய்க்கு மருத்துவம் செய்வதாக எண்ணிக் கொண்டு மருந்து கம்பெனிகளிடமும் மருத்துவமனைகளிடமும் ஏமாந்து போகும் அவல நிலை யாருக்கும் உண்டாகக் கூடாது.

சேர்த்த பணம் முழுவதையும் இழந்தது மட்டுமல்லாமல், சொத்து சுகத்தை விற்று, கடன்பட்டு கடைசியில் நோயாளிகளாகவே பலர் மரணிக்கிறார்கள். இல்லாத நோய்களுக்கு வைத்தியம் பார்த்ததில் சேர்ந்த கடனை அடைக்க முடியாமல், அவர்களின் பிள்ளைகளும் கடன்காரர்களாகவும், மன நோயாளிகளாகவும் மாறுகிறார்கள்.

இந்த அவலநிலை ஏன் நம் சமூகத்திற்கு உருவானது? அறிவியல், வானியல், மருத்துவம், பொருளியல் என் அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கிய நம் இனம் இன்று சீர்கெட்டுக் கிடக்கும் காரணம் என்ன? இன்று அனைத்துத் துறைகளிலும் நாம் அடுத்தவரை எதிர்பார்த்து நிற்க வேண்டிய சூழ்நிலை எதனால் உருவானது?

நம் முன்னோர்கள் சொன்னதைப் பின்பற்றாமல், வெள்ளைக்காரன் சொன்னான், ஜப்பான்காரன் சொன்னான் என்று அடுத்தவன் பின்னால் சென்றதும், நம் முன்னோர்களை முட்டாள்களாக எண்ணியதும் தான் இன்றைய நிலைமைக்குக் காரணம்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின்.

குறள் 942

உரை
இதற்கு முந்தைய வேளையில் உண்ட உணவு முழுதாக செரித்து விட்டதா என்பதை அறிந்து. இப்போது இருக்கும் பசியின் அளவையும் அறிந்து, பசியின் அளவுக்குத் தக்க உணவு உட்கொண்டால். இந்த உடலைப் பாதுகாக்க எந்த மருந்தும் தேவைப்படாது.

திருவள்ளுவர் திருக்குறளில் மருந்து என்ற தலைப்பில் பத்து பாடல்களை எழுதியுள்ளார் அவற்றைப் புரிந்துகொண்டு பின்பற்றினாலே அனைவரும் நோய்களின்றி வாழலாம், எல்லா நோய்களும் குணமாகும். என்ன இல்லை நம்மிடம்? உலகின் அனைத்து அறிவும், ஞானமும் தமிழ் மொழியில் தான் உள்ளன, ஆனால் படிக்கத்தான் ஆள் இல்லை. அவற்றைப் படிக்காவிட்டால் இழப்பு நமக்குத்தான்.

பாரம்பரிய மருத்துவங்களான சித்தா, யுனானி, ஆயுர்வேதம், அக்குபஞ்சர், அக்குப்பிரசர், நாட்டு வைத்தியம் என பல இருக்கையில், இரசாயனங்களை மருந்தாகப் பயன்படுத்திய பிறகுதான் மனிதனின் நோய்கள் மோசமாகி உயிரைக் குடிக்கத் தொடங்கின.

சிறிய நோய்களாக இருக்கும் பல நோய்கள் முற்றி உயிரைக் குடிப்பதற்கு இரசாயன மருந்துகளே முக்கிய காரணமாக இருக்கின்றன. நோய்கள் உண்டான பிறகு வைத்தியத்தைத் தேடாதீர்கள், நோய்களின்றி வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.

நமது இணையதளத்திலேயே ஆரோக்கியம் தொடர்புடைய பல கட்டுரைகள் உள்ளன அவற்றைத் தேடி வாசித்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X