நோய்களின் வகைகள், உடலை முழுமையாக இயங்கவிடாமல், இயக்கத்தில் தடை உண்டாவதையே நோய் என்று அழைக்கிறோம். நோய்கள் பல்லாயிரம் பெயர்களால் அழைக்கப்பட்டாலும் உண்மையான நோய்கள் என்பவை வெகுசிலதான். எல்லா நோய்களுக்கும் மூல காரணமாக இருப்பவை, தவறான உணவு முறைகள், தவறான வாழ்க்கை முறைகள், மற்றும் தவறான பழக்க வழக்கங்களினால் உடலில் சேரும் கழிவுகளை.
தவறான உணவுப் பழக்கத்தினால் உண்டாகும் அஜீரணம். அஜீரணத்தினால் உண்டாகும் உடலின் ஆற்றல் குறைபாடுகள் மற்றும் மலச்சிக்கல். ஆற்றல் குறைபாடுகளினால் உண்டாகும் உறுப்புகளின் இயக்க குறைபாடுகள். அசீரணத்தின் காரணமாக உணவுக் கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் குடலில் தேங்குவது. குடலில் தேங்கும் உணவுக் கழிவுகள், நச்சுத்தன்மை கொண்டவையாக மாறி, பலவீனங்களையும், உடல் உபாதைகளையும் உருவாக்குவது. உடலில் கழிவுகள் அதிகரித்தால், அவை இரத்தத்தில் கலக்கும். இரத்தத்தில் கலந்த கழிவுகள் உறுப்புகளில் சேரும், உறுப்புகளைப் பாதிக்கும். உடலின் இயக்க தடைகளினால் உண்டாகும் வலிகள், வேதனைகள் மற்றும் பலவீனங்கள்.
இவ்வளவுதான் நோய்கள், மேலே குறிப்பிட்ட நோய் வகைகளை வாசிக்கும் போது உங்களுக்கு எந்த அச்சமும் பதற்றமும் உண்டாகியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் புரியாத லத்தீன் மொழியில் தொந்தரவுக்கு ஒரு பெயர் சூட்டியதும் தானாக அச்சம் உருவாகிவிடுகிறது. பயன்பாட்டு மற்றும் புரிதல் காரணங்களுக்காக ஆங்கில மருத்துவர்கள் நோய்களுக்கு லத்தீன் மொழியில் பெயர் சூட்டுகிறார்கள். அந்த பெயர்களைக் கண்டு அஞ்சாமல், உடலில் உண்டாகியிருக்கும் உண்மையான பாதிப்பைக் கண்டறிந்தால் அச்சம் உருவாகாது.
Leave feedback about this