நோய்கள்

நோய்களை உண்டாக்கும் காரணிகள்

நோய்களை உண்டாக்கும் காரணிகள். அஜீரணமும், மலச்சிக்கலும் சுடுகாட்டுத் தேரின் இரண்டு சக்கரங்கள் என்று நம் முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். அஜீரணமும், மலச்சிக்கலும் தான் மனிதர்கள் அனுபவம் செய்யும் அத்தனை நோய்களுக்கும் அத்தனை தொந்தரவுகளுக்கும் மூல காரணமாக இருக்கின்றன. ஜீரணம் சீர்கேடு அடைய மற்றும் மலச்சிக்கல் உண்டாக பல காரணங்கள் உள்ளன, அவற்றில் சிலவற்றை இங்குப் பார்ப்போம்.

1. ஜீரணம் சீர்கேடு அடைவதற்கு முக்கியமான காரணம் பசியின்றி உணவை உட்கொள்வது.

2. சமையலில் அதிகமாக மசாலா பொருட்கள், மற்றும் சுவையூட்டிகளைப் பயன்படுத்துவது.

3. அதிகமான, காரம், இனிப்பு அல்லது புளிப்புச் சுவைகொண்ட உணவுகளை உட்கொள்வது.

4. அதிகமாக மாமிசம் மற்றும் அசைவ உணவுகளை உட்கொள்வது.

5. உணவை நன்றாக மெல்லாமல் விழுங்குவது.

6. இரசாயனங்கள் கலந்த அல்லது புட்டியில், பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்வது.

7. பழங்கள் மற்றும் காய்கறிகளைக் குறைவாக உட்கொள்வது.

8. சாப்பிடும்போது அதிகமாகத் தண்ணீர் அருந்துவது.

9. சாப்பிடும் போது உணவின் மீது கவனம் செலுத்தாமல் மற்ற சிந்தனைகளில் மூழ்குவது, தொலைக்காட்சி பார்ப்பது, பாடல்கள் கேட்பது, வாசிப்பது, அரட்டை அடிப்பது, தொலைப்பேசியைப் பயன்படுத்துவது.

10. இரவில் தாமதமாக உணவை உட்கொள்வது.

11. இரவில் அதிக நேரம் விழித்திருப்பது, தாமதமாக உறங்கச் செல்வது.

12. இரவு மிகக் குளிர்ந்த அறையில், அல்லது காற்றோட்டம் இல்லாத அறையில் உறங்குவது.

13. மனம் அமைதியற்று இருப்பது.

14. காலையில் தாமதமாக எழுந்திருப்பது.

15. இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகளை உட்கொள்வது.

மேலே குறிப்பிட்டிருக்கும் விசயங்களைச் சீர் செய்தலே பெரும்பாலான நோய்கள் குணமாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *