நோய்களைக் குணப்படுத்தும் வழிமுறை உதாரணம். ஒருவர் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய இந்த தொந்தரவுக்கு ஆங்கில மருத்துவர்கள், பல பெயர்கள் சூட்டுவார்கள், ஆனால் உண்மையில் அவருடைய தொந்தரவு என்ன? மூச்சுவிட சிரமமாக உள்ளது அவ்வளவு தானே. இதை எவ்வாறு குணப்படுத்துவது?
உண்மையில் இந்த நோயாளியைக் குணப்படுத்துவது மிகச் சுலபம் ஆனால் சில மருத்துவர்கள் அதை செய்யமாட்டார்கள். அந்த நோயாளியை வைத்து பணம் பண்ணுவதற்காக அவரின் நோய் குணமாகாமல் பார்த்துக் கொள்வார்கள், அல்லது அந்த நோயின் தீவிரத்தை அதிகமாக்குவார்கள்.
இந்த நோயாளியை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும்? முதலில் மூச்சுவிட உடலுக்கு எந்த உறுப்பு துணைப் புரிகிறது? நுரையீரல். மூச்சுவிட சிரமமாக இருந்தால் அல்லது மூச்சு தொடர்பான தொந்தரவுகள் இருந்தால் நுரையீரலுக்கு மருத்துவம் செய்ய வேண்டுமே ஒழிய, மூச்சுவிட உதவி செய்கிறேன் என்று மூக்குக்கு மருத்துவம் செய்யக் கூடாது.
அவர் நோய் முழுமையாக குணமாக
1. நுரையீரலில் சேர்ந்திருக்கும் கழிவுகளை முதலில் வெளியேற்ற வேண்டும்.
2. எவ்வாறு கழிவுகள் சேர்ந்தன என்பதைக் கண்டறிந்து; புதுக் கழிவுகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
3. நுரையீரலின் இயக்க சக்தியை அதிகரிக்க வேண்டும்.
4. ஒழுங்கான வாழ்க்கை முறைகளையும், உணவு முறைகளையும் கற்றுத்தர வேண்டும்.
இவற்றைச் செய்தால், உடலே அவரின் நோய்களை சுயமாக குணப்படுத்திவிடும். தொந்தரவுகள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். அந்த ஆரோக்கியம் நிரந்தரமாக நிலைத்தும் இருக்கும்.
நோய்களைக் குணப்படுத்துவது எவ்வளவு சுலபம் பார்த்தீர்களா? எந்த மருத்துவர் இவற்றைச் செய்கிறாரோ அவர் மட்டுமே உண்மையான மருத்துவர். மூச்சுத் திணறல் என்றதும் மூக்கில் கேஸ் வைப்பதும், வாயில் ஸ்ப்ரே அடிப்பதும் எந்த காலத்திலும் நிரந்தரமான தீர்வாக அமையாது. அந்த நபர் இறுதிவரையில் நோயாளியாகவே வாழ நேரிடும்.
மருந்துகளை உட்கொள்ளும் வரையிலும், ஸ்பிரேயை அடிக்கும் வரையிலும், சுலபமாக மூச்சு விடலாம் என்றும், மருந்து மாத்திரைகள் எடுப்பதை நிறுத்தினால் உங்கள் உயிருக்கு நாங்கள் உத்தரவாதம் இல்லை என்றும், மிரட்டி பணத்தைப் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்திடம் சிக்கிக் கொள்ளாதீர்கள். சரியான மருத்துவரை நாடி, சரியான வாழ்க்கை முறையைப் பின்பற்றி உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுத்துக் கொள்ளுங்கள்.