நோய்களைக் குணப்படுத்தும் உண்மையான மருத்துவர். நோயாளிகளின் நோய்களைக் குணப்படுத்துவது தாங்கள் அல்ல என்பதை, ரெய்கி சிகிச்சை அளிக்கும் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். சிகிச்சை பெறுபவரின் உடலில் கலக்கும் பிரபஞ்ச ஆற்றல் தான் அவரின் நோய்களையும், வேதனைகளையும், துன்பங்களையும் நீக்க துணைப் புரிகிறது என்பதை உணர வேண்டும்.
ரெய்கி சிகிச்சை அல்லது மற்ற இயற்கையைச் சார்ந்த சிகிச்சையை அளிப்பவர் நான்தான் சிகிச்சை அளிக்கிறேன், நான்தான் குணப்படுத்துகிறேன் என்ற எண்ணம் தோன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நான் தான் மற்றவர்களுக்கு நோய்களைக் குணப்படுத்துகிறேன், துன்பங்களில் உதவுகிறேன் என்பன போன்ற எண்ணங்கள் உருவாகத் தொடங்கிவிட்டால் அவருக்குள் ஆணவமும் கர்வமும் உண்டாகி விட்டது என்று அர்த்தம்.
நடப்பன அனைத்தும் அவன் (இறைவன்) செயல், அவன் அருளாலே, அவன் உதவியைக் கொண்டு நான் என் முயற்சியை செய்கிறேன். முடிவை இறைவன் கையில் ஒப்படைத்து விடுகிறேன் என்று நல்லதோ கெட்டதோ அனைத்தையும் இறைவன் மீது சாத்தி விட வேண்டும். நான் தான் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் செய்தால், முயற்சிகள் வெற்றி பெறாமல் போகலாம் மேலும் மற்றவர்களின் கர்மாக்களையும் நீங்கள் சுமக்க நேரிடலாம்.