நோய்களை குணப்படுத்தும் 5 வழிமுறைகள்.ஒரு மனிதர் நோய்வாய்ப்பட்டால் அதை முழுமையாக குணப்படுத்திக் கொள்ள அவர் ஐந்து அடிப்படை ஒழுக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். இந்த ஐந்து அடிப்படை ஒழுக்கங்களை கடைப்பிடிக்கும் போது அவர் விரைவாக குணமடைவார். இந்த ஒழுக்கங்களைக் கடைப் பிடிக்கவில்லை என்றால் என்னதான் உயரிய மருத்துவம் செய்தாலும், நவீன மருத்துவம் செய்தாலும், அவரின் உடலும் மனமும் குணமடையத் தாமதமாகும்.
உணவை உட்கொள்ளும் முறைகள்
உணவு உண்ணும் பழக்கத்தை முதலில் முறைப்படுத்த வேண்டும். பசித்தால் மட்டுமே பசியின் அளவுக்கு உணவை உட்கொள்ள வேண்டும். அந்த உணவு உடலுக்கு ஒத்துக்கொள்ளக் கூடியதாகவும் எளிதில் ஜீரணிக்க கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அதிகமான காய்கறிகளையும் பழங்களையும் உட்கொள்ள வேண்டும்.
தண்ணீர் அருந்தும் முறை
அவசியமில்லாமல், தாகம் இல்லாமல் தண்ணீர் அருந்தக் கூடாது. தாகம் உண்டானால் மட்டுமே தண்ணீர் அருந்த வேண்டும். சீனி, வர்ணங்கள், வாசனைகள், இரசாயனங்கள், போன்றவை கலக்கப்பட்ட பானங்களை அருந்தக் கூடாது. கொதிக்க வைத்த அல்லது அதிகமாக வடிகட்டப்பட்ட தண்ணீரை அருந்தக்கூடாது.
உடலுக்கு போதிய ஓய்வு கொடுக்க வேண்டும்
உடலில் சோர்வு உண்டானால் ஓய்வெடுக்க வேண்டும். அசதியாக இருக்கும் போது வற்புறுத்தி வேலை செய்யக் கூடாது.
இரவு உறக்கம் அவசியம்
உறக்கம் வரவில்லை என்றாலும் இரவு 9 மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும். இரவு 9 மணி முதல் காலை 4 மணி வரையில் கண்டிப்பாக படுக்கையில் உறக்கத்தில் இருக்க வேண்டும்.
மனதை சாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள்
மனதை, கோபம், வெறுப்பு, பொறாமை, பயம், எரிச்சல், கர்வம் போன்ற தீய எண்ணங்கள் இல்லாமல் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த 5 விசயங்களைச் சரிசெய்யும் போதே உடல் பாதிக் குணமாகிவிடும். மீதியை ரெய்கி மற்றும் இயற்கை சிகிச்சைகளின் மூலமாக குணப்படுத்தி விடலாம்.