நோய்கள்

நோய் உருவாக 10 முக்கிய காரணங்கள்

orange and white plastic bottle on white textile

மனிதர்களுக்கு நோய் உருவாக 10 முக்கிய காரணங்கள். உடல் உபாதைகளும் நோய்களும் உள்ளவர்கள் அவற்றை எப்படியாவது சரி செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் அவை உருவாகக் காரணமாக இருந்தவற்றை திருத்திக் கொள்ளாமல் எவ்வாறு உடல் உபாதைகளையும் நோய்களையும் குணப்படுத்த முடியும்? அவற்றைக் குணப்படுத்த வேண்டும் என்றால் முதலில் அவை உருவாகக் காரணமாக இருந்தவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு நோய் உருவாக 10 முக்கிய காரணங்கள்.

1. பசியின்றி உணவை உட்கொள்வது அல்லது பசியை விட அதிகமாக உண்பது.

2. தாகமின்றி, உடலின் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் அருந்துவது.

3. இரவில் தூக்கமின்மை, இரவில் விழித்திருப்பது அல்லது தாமதமாக உறங்குவது.

4. மலம், சிறுநீர், போன்ற உடலின் கழிவு நீக்கங்களை அடக்கி வைப்பது அல்லது அவற்றின் வெளியேற்றத்தைத் தாமதப்படுத்துவது.

5. காய்ச்சல், சளி, இருமல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வியர்வை, போன்ற கழிவு நீக்கங்களை வெளியேற விடாமல் மருந்து மாத்திரைகளைக் கொண்டு தடுப்பது.

6.தேவையில்லாமல் பகலில் அதிக நேரம் உறங்குவது.

7. உடலோ மனமோ சோர்வாக இருக்கும் வேளைகளில் ஓய்வெடுக்காமல் உடல் உழைப்பு செய்வது.

8. தினசரி பயன்படுத்தும் பொருட்களில் கலக்கப்பட்டிருக்கும் இரசாயனங்கள்.

9. பொறாமை, எரிச்சல், கர்வம், திமிர், பேராசை போன்ற தீய குணங்கள்.

10. அடிக்கடி அல்லது அதிகமாக இரசாயனங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்து மாத்திரைகளை உட்கொள்வது.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field