Announcement

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2025

இந்த புதிய ஆண்டை புதிய சிந்தனையுடனும் புதிய பரிமாணத்துடனும் தொடங்குங்கள்.

இத்தனை ஆண்டுகள் கடந்து வந்த வாழ்க்கைக்கும் அனுபவங்களுக்கும் நன்றி செலுத்துங்கள். இதுவரையில் உங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் மனதார நன்றி செலுத்துங்கள், நீங்கள் துன்பம் கொடுத்த நபர்களிடம் மனதார மன்னிப்பு கோருங்கள், உங்களுக்குத் துன்பம் கொடுத்த நபர்களை மனதார மன்னித்துவிடுங்கள்.

இந்த ஆண்டும் எதிர்வரும் ஆண்டுகளும் நிம்மதியும், ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், செல்வமும், நிறைந்த ஆண்டுகளாக அமையும் என்று முழுமையாக நம்புங்கள், அவ்வாறு அமைய இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.

உடல் ஆரோக்கியத்தையும், மன நிம்மதியையும், குடும்ப உறவையும், பொருளாதாரத்தையும் பலப்படுத்தக் கூடிய விசயங்களை கற்றுக் கொள்ளுங்கள் பின்பற்றுங்கள்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நல்லதே நடக்கும், சந்தோசம்