நியூ நார்மல் என்பது என்ன? இந்த ஆண்டின் தொடக்கம் முதலாக நியூ நார்மல் (New Normal) என்ற வார்த்தையை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். மலேசியாவில் நான் முதன் முதலில் இந்த வார்த்தையைப் பார்த்தது ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தின் நுழைவாயிலில் தான். “இனி நாம் நியூ நார்மலுக்கு மாற வேண்டும், புதிய கட்டுப்பாட்டு வாழ்க்கைக்குப் பழகிக்கொள்ள வேண்டும்” என்று அங்கே ஒரு விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் நான் முதன் முதலில் கேள்விப்பட்டது நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பேசும்போதுதான். அவர் ஒரு காணொளியில் “இனி நாம் அனைவரும் (நியூ நார்மல்) புதிய கட்டுப்பாட்டு வாழ்க்கைக்குப் பழகிக் கொள்ள வேண்டும்” என்று பேசினார். அந்தக் காலகட்டத்தில் பல பன்னாட்டுச் செய்தி நிறுவனங்களும், தொலைக்காட்சிகளும், நாளிதழ்களும், இணையதளங்களும் நியூ நார்மலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தன.
நியூ நார்மல் என்ற புதிய வாழ்க்கை முறை மக்களைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று அத்தனை செய்தி நிறுவனங்களும் அரசாங்கங்களும் பிரச்சாரம் செய்கின்றன. அதாவது கோவிட்-19 தொற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றவே இந்த நியூ நார்மல் வாழ்க்கை முறை நடைமுறைப் படுத்தப்படுகிறது என்று அரசாங்கங்கள் கூறிவருகின்றன.
முகக்கவரி (mask) அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, மனிதர்களுக்கிடையில் இடைவெளியை கடைபிடிப்பது, மற்றும் வீட்டில் அடங்கி கிடப்பது தான் நியூ நார்மல் என்று தொடங்கி, படிப்படியாக பல புதிய சட்டங்களை உருவாக்கி மக்களை கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளன.
நியூ நார்மல் என்பது என்ன?
நியூ நார்மல் என்றால் என்னவென்று கேட்டால் “இ”க்களை மக்களின் மீது திணிப்பது தான் நியூ நார்மல். மனித வாழ்க்கையில் அத்தனை விசயங்களையும் “இ” மயமாக்குவது, அதாவது அத்தனை விசயங்களையும் மின்னியல் மயமாக்குவது. அதன் தொடக்கமாகத்தான் இந்திய அரசாங்கம் அத்தனை விசயங்களிலும் மின்னியல் பயன்பாட்டை அறிமுகம் செய்தது. அனைவருக்கும் வங்கிக் கணக்கை கட்டாயமாக்கியது, அரசாங்க பரிவர்த்தனைகள் அத்தனையும் இணையதளம் மூலமாக தான் செய்ய வேண்டும் என்று மக்கள் நிர்பந்திக்கப் பட்டது, மேலும் பல விசயங்களைக் கூறலாம்.
மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு நல்ல திட்டம் போன்றுதான் தோன்றும் ஆனால் இதன் உள் நோக்கம் மக்களை அடிமைப்படுத்துவது, நாட்டு மக்களை சுயமாக இயங்க முடியாமல் செய்வது, மக்களை அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. அதன் தொடர்ச்சியாக அந்த அரசாங்கம் யாருக்கு அடிமையாக இருக்கிறதோ, அந்த நாட்டின் மக்கள் அனைவரும் அந்த நபரின் அல்லது நிறுவனத்தின் மறைமுக அடிமைகள் ஆவார்கள்.
Leave feedback about this