ரெய்கி

உடலில் நேர்மறை ஆற்றல்களைக் கிரகிக்க

உடலில் நேர்மறை ஆற்றல்களைக் கிரகிக்க. ஒரு மனிதர் நேர்மறை ஆற்றல்களை (positive energy) உணவின் மூலமாகவும். வாழ்க்கை முறைகளின் மூலமாகவும், ஆன்மீகப் பயிற்சிகளின் மூலமாகவும், மற்றும் இயற்கையிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பேற்றலை சேகரித்துக் கொள்ள சில வழிமுறைகளை பார்ப்போம்.

உணவின் மூலமாக

எளிதாக உடலால் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை உட்கொண்டால் உடல் சுயமாகவே நல்ல ஆற்றல்களை உற்பத்தி செய்துக் கொள்ளும். மேலும் நாம் உட்கொள்ளும் உணவானது மனதுக்கும், கண்களுக்கும், நாவுக்கும் விருப்பமானதாக இருக்க வேண்டும்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்வதன் மூலமாக பிரபஞ்ச ஆற்றலை அதிகமாக உடலில் சேகரிக்கலாம். காய்கறிகளின் ஆற்றல் அவற்றைச் சமைக்கும் போது குறைந்து போகலாம் அல்லது சிதைந்து போகலாம். ஆனால் பழங்களில் இருக்கும் ஆற்றல்கள் மட்டும் மனிதர்களுக்கு முழுமையாக கிடைக்கும், காரணம் பழங்களை சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம். பழங்களை அதிகமாக சாப்பிடுவதன் மூலமாக உடலில் அதிகப்படியான ஆற்றல்களைச் சேகரிப்பது மட்டுமின்றி நோய்களையும் குணப்படுத்தலாம்.

இயற்கையிலிருந்து

இயற்கையான தூய காற்றை சுவாசிக்கும் போது அவற்றில் கலந்திருக்கும் பிரபஞ்ச ஆற்றல்களை உடல் கிரகித்துக் கொள்கிறது. காடு, மலை, குகை, புல்வெளி, போன்ற இடங்களுக்குச் சென்று வெறும் காலில் செருப்பில்லாமல் நடக்கும்போது உடல் அந்த நிலத்திலிருந்தும், காற்றிலிருந்தும், வெளியிலிருந்தும் பிரபஞ்ச ஆற்றல்களைக் கிரகித்துக் கொள்கிறது. கடல், ஆறு, குளம், குட்டை, போன்ற இயற்கையான நீர்நிலைகளில் குளிக்கும் போது உடல் அவற்றில் இருக்கும் பிரபஞ்ச ஆற்றல்களைக் கிரகித்துக் கொள்கிறது. பஞ்சபூதங்களில் காற்று, நீர், ஆகாயம், நெருப்பு, நிலம் போன்றவற்றில் உருவாகும் ஆற்றல்களையும் சுயமாக கிரகித்துக் கொள்ளும் தன்மை நமது உடலுக்கு இயல்பாகவே உள்ளது.

பயிற்சிகளின் மூலமாக

மூச்சுப்பயிற்சி, யோகா, தியானம், தைச்சி, நோன்பு, வழிபாடுகள், தொழுகை, வணக்கங்கள் போன்றவற்றின் மூலமாகவும் உடல் பிரபஞ்சத்தின் படைப்பாற்றலைக் கிரகித்துக் கொள்கிறது. தன்னை தானே சீர் செய்தும் கொள்கிறது.

Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X