நேரம் – காலம் – சிந்தனை
நாம் செய்யும் அனைத்தும் சரியாகத் தோன்றினால், நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சரி என்று தோன்றினால், இது ஒரு அரிய சந்தர்ப்பம் இதைத் தவறவிட்டால் மீண்டும் இது போன்ற சந்தர்ப்பம் அமையாது என்று தோன்றினால், நாம் தவறான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
நேரம் சாதகமாக இல்லாதவர்களுக்கு அதிகமாக இது போன்ற சிந்தனைகள் உருவாகும். அவசரப்படாமல் நிதானமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும். இவர்கள் மற்றவர்களுடன் கலந்தாலோசனை செய்து முடிவெடுப்பது நல்லது.