குழந்தைகளுக்கு நெஞ்சுச் சளி குணமாக வீட்டு மருத்துவம். இந்த மருத்துவத்தைப் பிறந்த குழந்தை முதல் அனைத்து வயது குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
1. வெற்றிலை 1
2. சிறிது ஓமம்
3. பூண்டு 2 பல்
4. இஞ்சி சிறிய துண்டு
5. கற்பூரவல்லி இலையும் சேர்த்துக் கொள்ளலாம்.
குழந்தையின் வயதிற்கு ஏற்ப பொருட்களைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
1. மேலே உள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து சிறிய நெருப்பில், சிறிது அளவு தண்ணீர் கலந்து அவித்துக்கொள்ள வேண்டும்.
2.தண்ணீர் சுண்டும் அளவுக்கு அவித்து சாற்றைத் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
3. அந்த மூலிகை சாற்றில் தேன் அல்லது பனங்கற்கண்டைச் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
4. குழந்தையில் வயதுக்கு ஏற்ப ஒரு அவுன்ஸ் முதல் கால் கிளாஸ் வரையில் கொடுக்கலாம்.
5. சளி முழுமையாகக் குணமாகும் வரையில் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டும்.
Leave feedback about this