தெளிந்த வானம்
நகரும் மேகம்
குளிர்ந்த காற்று
அதன் கீழ் அழகிய
பச்சை மலைத்தொடர்
எங்கும் மரங்கள்
எங்கும் பசுமை
கண்ணைப் பறிக்கும்
குளிர்ந்த நதி ஒன்று
வளைவும் நெளிவும்
கூடிய கன்னியாக
அன்னநடையில்
வலம் வருகிறது
அவற்றின் நடுவே
ஒரு செம்மண் வீடு
அந்த சிறிய வீட்டில்
நீயும் நானும்
நானும் நீயும்
நாமும்…