பொது

நீல கிரிஸ்டல் கல்

நீல கிரிஸ்டல் கல் – Blue sapphire. இன்று நாம் ஒரு முக்கியமான கிரிஸ்டல் கல்லைப் பற்றிப் பார்ப்போம். நீலக்கல் (Blue sapphire) இந்த கிரிஸ்டல் கல் மன நிம்மதிக்கும், வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாவதற்கும், ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கும், உறுதுணையாக இருக்கும். இது ஹீலர்களுக்கும், வியாபாரிகளுக்கும், வாழ்க்கையில் அதிகமான பிரச்சனைகளைச் சந்திப்பவர்களுக்கும், உகந்த கல். குறிப்பாக சிறு வயது முதலாக அதிகப்படியான துன்பங்களை மீண்டும் மீண்டும் அனுபவிப்பவர்களுக்கும் இந்த கிரிஸ்டல் துன்பங்களைக் குறைப்பதற்கும், வாழ்க்கையில் நிம்மதியும், செல்வமும் அதிகரிப்பதற்கும் உதவியாக இருக்கும்.

தரமான Blue sapphire கல் இந்திய ரூபாய் மதிப்பில் இருபது ஆயிரத்துக்கும் மேல் இருக்கலாம். அதிகமாக விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் நீலம், Blue quartz, Blue topaz, Turquoise, போன்ற மற்ற நீல நிற கற்களையும் பயன்படுத்தலாம். நீங்கள் வாங்கும் கற்கள் விலை அதிகமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை, உங்களால் இயன்ற விலைக்கு வாங்கினால் போதும். அல்லது உங்கள் ஊரில் உள்ள நகைக் கடைகளில் அல்லது இணையம் மூலமாக ஏதாவது ஒரு நீல நிறக் கல்லை வாங்கி உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மாதத்துக்கு உங்கள் வாழ்வில் நடக்கும் விசயங்களைக் கவனியுங்கள்.

நல்ல திருப்தியான விசயங்கள் நடந்தால் அந்த கல்லை மோதிரமாக அல்லது ஆபரணமாக செய்து அணிந்துக் கொள்ளுங்கள்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X