நீ தனிமையில் இருக்கையில்
யாருடைய நினைவுகள்
அலைபாய்கின்றனவோ
இயற்கையின் அசைவுகள்
யாரை உனக்கு நினைவு
படுத்துகின்றனவோ
இளையராஜாவின்
காதல் பாடல்கள் – யாரை
நினைவு கூறுகின்றனவோ
எழுகையிலும் உறங்கையிலும்
யாருடைய நினைவுகள்
வந்து போகின்றனவோ
உன் வாழ்க்கையின்
மகிழ்ச்சியான நாட்களிலும்
துன்பமான நாட்களிலும்
யாருடைய நினைவுகள்
நிழலாடுகின்றனவோ
நீ வாசித்த கவிதையை
அடுத்ததாக யார்
வாசிக்க வேண்டுமென்று
விரும்புகிறாயோ
நீ படித்துச் சிரித்த
நகைச்சுவை துணுக்கை
யாருடன் பகிர்ந்துகொள்ள
மனம் துடிக்கிறதோ
உன் இன்பங்களை
யாருடன் பகிர்ந்து கொள்ள
மனம் விரும்புகிறதோ
நீ ரசித்த சினிமா
நீ ரசித்தப் பாடல்
நீ ரசித்த நகைச்சுவை
யாரை நினைவு
படுத்துகிறனவோ
அவளை / அவனை
எக்காரணத்தைக் கொண்டும்
எதற்காகவும் இழந்துவிடாதே
விதிவசத்தால்
ஒருவேளை இழந்தாலும்
மறந்து விடாதே
உன் ஜீவனில்
முழுமையாக
குடிகொண்டிருக்கும்
அவளோ அவனேதான்
நீ உயிர்வாழக் காரணம்
Leave feedback about this