நோய்கள்

நவீன நோய்கள் உருவாகும் காரணங்கள்

நவீன நோய்கள் உருவாகும் காரணங்கள். முந்திய தலைமுறைகளுடன் ஒப்பிடுகையில், நவீன மருத்துவத்துறை பெரும் வளர்ச்சி அடைந்து விட்டதாகக் கூறிக் கொள்ளும் இந்த காலகட்டத்தில் தான், மனிதர்களுக்கு நோய்களும் உடல் உபாதைகளும் அதிகமாக உருவாகின்றன. நவீன மனிதர்களுக்கு நோய்களும் உடல் உபாதைகளும் அதிகரித்துக் கொண்டே இருப்பதற்கு சில முக்கியமான காரணங்கள்.

1. தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறைகள்.

2. உடலுக்கு ஒத்துக்கொள்ளாத மேலும் ரசாயனம் கலந்த உணவுகள்.

3. உடலின் இயக்கத்திற்கும் நோய்க்கும் வித்தியாசம் தெரியாத மனிதர்கள்.

4. உடலில் என்ன மாற்றம் நடந்தாலும் அதை நோயாகக் கருதி அச்சப்படும் மனிதர்கள்.

5. மனிதர்களின் உண்மையான நோய்களைக் கண்டறிய முடியாத மருத்துவர்கள்.

6. உண்மையான நோயை ஆராயாமல், உடல் காட்டும் அறிகுறிகளுக்கு (symptoms) மட்டுமே வைத்தியம் பார்க்கும் மருத்துவர்கள்.

7. நோய்களைக் குணப்படுத்துவதைக் காட்டிலும், புதிய நோய்களை உருவாக்கும் இரசாயன மருந்துகள்.

8. பல வகையான மருந்து மாத்திரைகளை ஒன்றாக உட்கொள்ளும் போது உண்டாகும் பக்க விளைவுகள்.

9. இவை அனைத்துடன் சேர்த்து, மனிதர்களுக்கு உடல் மற்றும் மருத்துவத்தின் மீது இருக்கும் தவறான கண்ணோட்டங்கள்.

10. மருத்துவம் செய்துகொண்டால் அனைத்து உடல் உபாதைகளும் குணமாகும் என்ற அலட்சியப் போக்கு.

மேலே கூறப்பட்ட காரணங்களால் தான் எங்குத் திரும்பினாலும் மருந்தகங்களும் மருத்துவமனைகளும் புதிதாக உருவாகிக் கொண்டே இருக்கின்றன. காரணம் இன்றைய மருத்துவத்துறை நோய்களைக் குணப்படுத்தவில்லை, மாறாக மனித உடல் மற்றும் மனதின் இயக்கம் தெரியாததால் புதிய நோய்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *