ஈர்ப்புவிதி-நன்றி உணர்வின் பலம்
ஈர்ப்புவிதி

ஈர்ப்புவிதி-நன்றி உணர்வின் பலம்

ஈர்ப்புவிதி-நன்றி உணர்வின் பலம். இந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கும், நமது ஆசைகளும் தேவைகளும் பூர்த்தியாவதற்கும் இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதி, தற்போது இருப்பனவற்றை நினைத்து திருப்தி அடைவதும் அவற்றுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவதும்.

சார்… நினைத்து மகிழும் அளவுக்கு அல்லது திருப்தி அடையும் அளவுக்கு என்னிடம் ஒன்றுமில்லையே, அவ்வாறு இருந்தால் தானே நினைத்து மகிழ முடியும் என்ற எண்ணம் சிலருக்குத் தோன்றலாம்.

சிந்தித்துப் பாருங்கள்,

  1. உங்களால் மூச்சுவிட முடிகிறதா?
  2. உங்கள் உடல் முழுமையாக இயங்குகிறதா?
  3. நீங்கள் உடுத்திக்கொள்ள ஆடை இருக்கிறதா?
  4. பசிக்கும் போது உண்ண உணவு கிடைக்கிறதா?
  5. நீங்கள் உட்கொள்ளும் உணவு ஜீரணம் ஆகிறதா?
  6. உடலின் கழிவுகள் சிரமமின்றி வெளியேறுகின்றனவா?
  7. உங்களுடன் அன்பைப் பகிர்ந்துகொள்ள உறவுகள் உள்ளனவா?
  8. நீங்கள் இரவில் உறங்க ஒரு இடம் இருக்கிறதா?

இந்த உலகில் பாதி மனிதர்களுக்கு மேல், மேலே கூறப்பட்ட பல விசயங்கள் இல்லை. இவை உங்களிடம் இருப்பதை எண்ணி நன்றி உணர்வுடன் திருப்தி அடைந்துள்ளீர்களா? இவை அனைத்துக்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தியுள்ளீர்களா?

எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்கத் தெரிந்த உங்களுக்கு, இதுவரையில் கொடுத்த விசயங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும், நன்றி உணர்வோடு இருக்க வேண்டும் என்று தோன்றியுள்ளதா? ஒரு பிச்சைக்காரருக்கு 1 ரூபாய் போட்டால் கூட அவர் நன்றி உணர்வைக் காட்டினால் தான் நமக்கு மீண்டும் அவருக்குக் கொடுக்கவும் உதவி செய்யவும் தோன்றும்.

இறைவனும் அப்படித்தான், இறைவன் இன்று வரையில் நமக்கு வழங்கிய விசயங்களுக்கு நாம் நன்றி உணர்வோடும், விசுவாசத்தோடும், மன நிறைவோடும் இருந்தால் மட்டுமே, இறைவனுக்கு மேலும் மேலும் நமக்கு வாரி வழங்கத் தோன்றும்.

இந்த உலகத்தின் செல்வங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டவன் இறைவன். கொடுப்பதனால் அவன் குறைந்துவிடப் போவதில்லை, உங்களுக்குக் கொடுப்பது அவனுக்கு சிரமமான காரியமும் இல்லை. பெற்றுக்கொள்ளும் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள், அனைத்தும் உங்களைத் தேடிவரும்.

நன்றி உணர்வோடு இருங்கள், நன்றி செலுத்துங்கள்.

Spiritualist, Reiki Master, Healer, Acupuncturist, Writer, Thinker, Speaker, Author.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *