தமிழ் கவிதை

நண்பன்

four person hands wrap around shoulders while looking at sunset

அன்பான தாய், தந்தை
சகோதரன் சகோதரி
உறவு சுற்றம்

நல்ல மனைவி
பொறுப்பான பிள்ளை
அமைந்தவன்

சொர்க்கத்தில் வாழும்
வரத்துடன் பிறந்தவன்

யாருமே இல்லாவிட்டாலும்
உண்மையான- நல்ல
நண்பனைப் பெற்றவன்

தனக்கான
சொர்க்கத்தை தானே
உருவாக்கிக் கொண்டவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X