நல்லவர்களுக்கு கடவுள் துணை இருப்பார். நல்லவர்களுக்கு கடவுள் துணை இருப்பார் என்று கூறுவார்களே அது பொய்யா? இல்லை! நல்லவர்களுக்கு துன்பம் உருவாகும் வரையில் இறைவனும் இயற்கையும் காத்திருக்க மாட்டார்கள். துன்பம் உருவாவதற்கு முன்பாகவே உள்ளுணர்வு மூலமாகவோ, அறிகுறிகள் மூலமாகவோ, பிற மனிதர்கள் மூலமாகவோ, நிச்சயமாக அந்த துன்பங்களைத் தவிர்க்கும் வழிகளை அவர்களுக்கு இறைவனும் இயற்கையும் காட்டுவார்கள்.
சற்று சிந்தித்துப் பார்த்தால் புரியும் பல வேளைகளில் துன்பங்களில் அல்லது தொந்தரவுகளில் சிக்கிக் கொண்ட பிறகு பெரும்பாலும் நாம் சொல்லும் ஒரு வாக்கியம் “அப்பவே அவர் சொன்னார் நான் தான் கேட்கவில்லை” “அப்பவே எனக்கு தோணிச்சு இது சரிவராது என்று” “அப்பவே நினைத்தேன் இது தப்புன்னு” “அப்பவே என் மனசு சரியில்ல”. பல சந்தர்ப்பங்களில் நாமே இவ்வாறு கூறி இருப்போம். இவை தான் நமக்கு வழங்கப்பட்ட முன்னறிவிப்புகளும் எச்சரிக்கைகளும் ஆகும். இவற்றைச் செவிகொடுத்துக் கேட்டு சற்று சிந்தித்துச் செயல்பட்டிருந்தால் துன்பங்களிலிருந்து நாம் விடுபட்டு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம்.
Leave feedback about this