வாழ்க்கை

நான் பார்த்த மனிதர்கள்

நான் பார்த்த மனிதர்கள். இறைவன் இந்த உலகை எவ்வாறு படைத்திருக்கிறான் என்பதை அறிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதனால் நான் எங்குச் சென்றாலும், அங்கு இருக்கும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களை கூர்ந்து கவனிப்பது வழக்கம். மதுரைக்கும் திருச்சிக்கும் சென்றிருந்த போது, அங்கு நான் பார்த்த சில மனிதர்களின் நோய்களையும் ஆரோக்கியத்தையும் பற்றித்தான் இந்த கட்டுரையில் பேசப் போகிறேன்.

நான் பார்த்த வெளி நோயாளிகள்

மதுரையில் ஒரு பிரபலமான மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அங்கு நான் பார்த்த நோயாளிகளில் பெரும்பாலானோர், தவறான வாழ்க்கை முறைகளினால் பாதிக்கப்பட்டவர்கள். உண்மையில் அவர்கள் நோயாளிகளே அல்ல தன்னைத் தானே நோயாளிகள் என்று தவறான நம்பிக்கை கொண்டவர்கள்.

அந்த மருத்துவமனையில் நான் பார்த்த பெரும்பான்மையான வெளிநோயாளிகளின் தொந்தரவுகளுக்கு மிக முக்கிய காரணங்களாக இருக்கக் கூடியவை:

  • குடிப் பழக்கம்.
  • புகையிலை பழக்கம்.
  • தூக்கமின்மை.
  • தாமதமாக உறங்குவது.
  • இரவில் விழித்திருப்பது.
  • அதிகமாக உண்பது.
  • பசி இன்றி உண்பது.
  • மனம் நிம்மதி அற்று இருப்பது.
  • பதப்படுத்திய உணவுகளை உட்கொள்வது.
  • இரசாயன மருந்து மாத்திரைகளை உட்கொள்வது.


மிகச் சுலபமாக மாற்றிக் கொள்ளக் கூடிய இந்த விசயங்கள்தான் அங்கு இருந்த 80% மக்களின் தொந்தரவுகளுக்குக் காரணமாக இருக்கக் கூடும். இந்த பழக்கங்களை மாற்றிக் கொண்டால் அனைத்து தொந்தரவுகளும் சுயமாக நீங்கிவிடும். அதை விடுத்து இலட்சக் கணக்கில் பணம் செலவழித்து உடலின் சிறிய தொந்தரவுகளை பெரிய நோய்களாக மாற்றிக் கொள்கிறார்கள்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது, அற்றது போற்றி உணின்.

குறள் 942


திருவள்ளுவர் மிக அழகாகக் கூறிச் சென்றுள்ளார். இதற்கு முந்தைய வேளையில் உட்கொண்ட உணவு முழுமையாக ஜீரணமாகிவிட்டதா என்பதை அறிந்து. இப்போது இருக்கும் பசியின் அளவையும் அறிந்து, பசியின் அளவுக்குத் தக்க உணவு உட்கொண்டால். இந்த உடலைப் பாதுகாக்க எந்த மருந்தும் தேவையில்லை என்று.

நான் பார்த்த குழந்தை நோயாளிகள்

அந்த மருத்துவமனையில் குழந்தைகளுக்கான பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் தாயின் கருவறையில் இருந்து வெளிவரும் போதே நோயுடன், அல்லது உடல் குறையுடன் வந்தவர்கள். இந்தக் குழந்தைகள் நோயாளிகளாக பிறப்பதற்கும் உடல் ஊனத்துடன் பிறப்பதற்கும் அந்த தாய் உட்கொண்ட இரசாயன மருந்துகள் தான் மிக முக்கிய காரணமாக இருந்திருக்கும். இந்த உண்மையை மறைப்பதற்கு, சொந்தத்தில் திருமணம், சத்து போதவில்லை என்று ஏதாவது பொய்யைச் சொல்வார்கள்.

மருத்துவர் சொல்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக கண்ட வைட்டமின், கால்சியம், சத்து மாத்திரைகளை உருக்கொண்டு, ஊசிகளைப் போட்டுக்கொண்டு பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கெடுதல் செய்கிறார்கள். ஆங்கில மருத்துவத்தின் பணம் பண்ணும் ஆசைக்கு இந்தத் தாய்மார்கள் பலியாகிறார்கள். தாய்மார்களே தயவு செய்து கொஞ்சம் சிந்தித்துச் செயல்படுங்கள். மருத்துவர் என்றாலும் அவரும் ஒரு வியாபாரிதான், நீங்களும் உங்கள் குழந்தைகளும் நோயாளிகளாக இருக்கும் வரைதான் அவருக்கு வியாபாரம், வருமானம் எல்லாம்.

நான் பார்த்த பெண்கள்

திருச்சியில் சாரதாஸ் துணிக்கடை வாசலில் நின்று கொண்டு அங்கு நடந்து கொண்டிருக்கும் மனிதர்களைக் கவனிக்கத் துவங்கினேன். முன்பெல்லாம் ஒரு பெண்ணிடம் நேரடியாக கேட்டு, அல்லது அவர் தாலி, மெட்டி அணிந்திருக்கிறாரா என்பதை கவனித்துத் தான் அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி விட்டதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள முடியும். அந்த சிரமம் நமக்கு வேண்டாம் என்று ஆங்கில மருத்துவர்கள், பிள்ளை பெற்ற பெண்கள் அனைவரையும் பீப்பாய்கள் போன்று மாற்றிவிட்டார்கள். பார்த்த உடனே தெரிந்து விடுகிறது, இவர்கள் குழந்தை பெற்ற பெண்கள் என்பது.

கிராமப்புறப் பெண்களும், ஏழைப் பெண்களும், ஆங்கில மருத்துவம் செய்யாத பெண்களும், பிள்ளைகளை ஈன்றெடுத்த பிறகும் உடலை ஒல்லியாகவும், கச்சிதமாக வைத்திருக்கும் போது. நகரத்துப் பெண்களுக்கு மட்டும் ஏன் உடல் பெருத்துவிடுகிறது என்பதைச் சிந்திக்காமல். பிள்ளை பெற்றாலே உடல் பெருத்துவிடும், இடுப்பு, பிட்டம் எல்லாம் பெருத்துவிடும் என்று தவறாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள் இன்றைய நவீனப் பெண்கள்.

ஏழைப் பெண்கள் ஆரோக்கியமாக, சுயமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் போது, நடுத்தர வர்க்கத்தின் பெண்களும், பணக்கார வீட்டுப் பெண்களும் மட்டும் அறுவைசிகிச்சை செய்து குழந்தை பெறுவது ஏன்? பிள்ளை பெற்ற பின்பு உடல் பெருப்பது ஏன்? பிள்ளை பெற்ற பின்பு, பால் சுரக்காமல் இருப்பது ஏன்? அந்தத் தாய்க்கு பல வகையான ஆரோக்கியச் சீர்கேடுகள் உண்டாவது ஏன்? என்று சிந்திப்பதில்லை.

பிறந்த குழந்தைக்கும், பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு வரும் அனைத்து ஆரோக்கிய தொந்தரவுகளுக்கும் ஒரே மூல காரணம் அவர்கள் உட்கொள்ளும் சத்து மாத்திரைகளும், அவர்கள் கர்ப்பமான பிறகு போட்டுக்கொள்ளும் ஊசிகளும் தான்.

தயவு செய்து இரசாயனம் கலந்த மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளைப் பயன்படுத்தாதீர்கள். ஸ்கேன் எடுக்காதீர்கள். முடிந்தால் கர்ப்பம் தரித்த பிறகு மருத்துவர்களிடம் செல்லாதீர்கள் ஆரோக்கியமான குழந்தைகளை ஈன்றெடுங்கள். குழந்தை பிறந்த பிறகும் ஆரோக்கியமாக இளமையாக வாழுங்கள்.

நான் பார்த்த முதியவர்கள்

அங்கு நான் பார்த்த முதியவர்கள் பலர் எலும்பு தொடர்புடைய நோய்களாலும், உடல் பலம் இல்லாமலும் காணப்பட்டார்கள். இதற்குக் காரணம் அவர்களின் செரிமானக் கோளாறும் மலச்சிக்கலும் தான். உணவைக் குறைத்து, காரம் மற்றும் புளிப்புச் சுவைகளைக் குறைத்து. பசித்தால் மட்டும் அளவோடு உணவை உட்கொண்டு. இரவு உணவைச் சமைக்காத உணவாக அல்லது வெறும் பழங்களாக மாற்றிக் கொண்டாலே அவர்களின் அனைத்து தொந்தரவுகளும் குணமாகும், ஆரோக்கியம் மேம்படும்.

அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இரசாயனங்களை அறவே தவிர்த்துவிடுங்கள். மருந்து மாத்திரைகளை வேண்டாம். பசித்தால் மட்டும் அளவோடு எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை உண்ணுங்கள். பழங்கள், காய்கறிகளை அதிகமாக உட்கொள்ளுங்கள். இரவில் விரைவாக படுக்கைக்குச் செல்லுங்கள்.

ஆரோக்கியமாக வாழ்வோம், ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்குவோம்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X