முஸ்லிம்கள் நாய் வளர்க்கலாமா?
முஸ்லிம்கள் நாய் வளர்க்கக் கூடாது என்று நேரடியாக எந்த தடையும் அல்குர்ஆனில் கிடையாது. நாயை இஸ்லாத்தில் நஜீஸ் அதாவது அசுத்தம் என்று தான் கூறுகிறார்களே ஒழிய ஹராம் என்று தடை செய்யவில்லை.
நாயின் எச்சில், சிறுநீர், மலம், போன்றவை மனிதனுக்கு நோய்களையும் உடல் உபாதைகளையும் உருவாக்கக்கூடும் என்பதால் நாய் வளர்ப்பதை ஊக்குவிக்கவில்லை.
பாதுகாப்பு மற்றும் வேட்டைக்காக முஸ்லிம்கள் நாய் வளர்க்கலாம் தப்பில்லை. அதன் எச்சில் மற்றும் கழிவுகள் மட்டும் உடலில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், மீறி பட்டுவிட்டால் மண்ணையும் நீரையும் கொண்டு சுத்தமாகக் கழுவிக் கொள்ள வேண்டும்.