முன்முடிவுகளும் உருவாகும் தடைகளும். ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பாகவே சிலர்; என்னால் இதை செய்ய முடியாது, எனக்கு இதை சரியாக செய்ய தெரியாது, இது என் அறிவுக்கும் தகுதிக்கும் மீறிய விசயம், என்பவை போன்ற முன்முடிவை வைத்திருப்பார்கள். அதனாலேயே எந்த ஒரு புதிய விவசாயத்தையும் செய்யாமல், தொடங்காமல், கற்றுக் கொள்ளாமல் இருப்பார்கள்.
ஒவ்வொரு வருடமும் வயது அதிகரிக்கும் போது உங்கள் அறிவும் திறமையும் அதிகரிக்க வேண்டும். அதற்காக தினமும் புதிய விசயங்களை கற்றுக்கொண்டு உங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். எனக்கு தெரியாது, என்னால் முடியாது என்று முன்முடிவுகளை உருவாக்கிக் கொண்டு உங்கள் வாழ்க்கையை தொலைத்துவிட கூடாது.
பத்து வயதில் உங்களுக்கு ஒரு விசயம் தெரியவில்லை என்றால் அது உங்கள் பெற்றோர்களின் தவறு; ஆனால் 30 வயதிலும் உங்களுக்கு ஒரு விசயம் தெரியவில்லை என்றால் அது உங்களுடைய தவறுதான். உங்களுக்கு எது தேவை, எது தேவையில்லை, என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் வாழ்க்கைக்கு தேவையான நல்ல விசயங்கள் அனைத்தையும் நீங்கள் தான் தேடி முயற்சி செய்து கற்றுக் கொள்ள வேண்டும்.
Leave feedback about this