மனம்

முக்காலத்தையும் எவ்வாறு அறிந்துக் கொள்கிறார்கள்?

முக்காலத்தையும் எவ்வாறு அறிந்துக் கொள்கிறார்கள்? ஒரு சிலர் மட்டும் நடந்த, நடக்கின்ற, நடக்கப்போகின்ற, விசயங்களை எவ்வாறு அறிந்துக் கொள்கிறார்கள்? இப்போது நடந்து கொண்டிருக்கும் விசயத்தை ஒருவர் விளக்கினால் அதனை புத்திக் கூர்மை என்று கூறலாம். பல வருடங்களுக்கு முன்பாக நடந்து முடிந்த ஒரு விசயத்தை இன்று திடீரென அறிந்து கொள்கிறார், அதற்குரிய விளக்கத்தைக் கூறுகிறார் என்றால், அதனை என்னவென்று கூறுவது?

நடந்து முடிந்தவற்றை எப்படியோ அறிந்துக் கொண்டார் என்று ஏற்றுக் கொண்டாலும், இன்னும் நடக்காத சில வருடங்கள் கழித்து நடக்கவிருக்கும் ஒரு விசயத்தை இன்றே முன்னறிவிப்பு செய்கிறார் என்றால் அதை எவ்வாறு விளக்குவது? அது எவ்வாறு அவருக்குத் தெரிந்திருக்கும்? நடந்த, நடக்கின்ற மற்றும் நடக்கவிருக்கும் விசயங்களை எவ்வாறு மனிதர்கள் அறிந்து கொள்கிறார்கள்?

அது எப்படி என்றால், மனிதனின் மனம் சலனமின்றி ஒருநிலையில் நிற்கும்போது, அது தனது கால எல்லைகளைக் கடந்து முக்காலத்திலும் பயணிக்கும் ஆற்றலைப் பெற்றுவிடுகிறது. அதனால் ஒருவரின் மனம் சலனமின்றி நிற்கும்போது அவர் முக்காலத்திலும் நடந்த, நடக்கின்ற மற்றும் நடக்கவிருக்கும் விசயங்களை அறிந்துக்கொள்ளும் ஆற்றலைப் பெற்றுவிடுகிறார்.

ஒரு சிலருக்கு பிறக்கும்போதே இந்த ஆற்றல் இருந்து வளர்ந்து உலக வாழ்க்கையில் நுழையும் போது மறைந்து விடுகிறது. இவ்வாறான மனிதர்கள் சிறுவயதில் நடந்த மற்றும் நடக்கப் போகின்ற விசயங்களைக் கூறுவார்கள், பெரியவர் ஆனதும் அந்த ஆற்றல் இருக்காது. ஒரு சிலருக்கு பிறந்து சில காலங்களில் உருவாகும். ஒரு சிலருக்கு சில பயிற்சிகளின் மூலமாக சித்திபெறும். ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் பிறந்தது முதல் இறுதி வரையில் இருக்கும். இந்த ஆற்றல் தன்னிடம் இருப்பதை சிலர் உணர்வார்கள், சிலர் உணரவே மாட்டார்கள். அனைத்துமே அவரவர் கர்மப் பலன்களைப் பொறுத்து அமையும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X