மூக்குக் கண்ணாடி செய்யும் கேடுகள்
மூக்குக் கண்ணாடி அணியும் பழக்கத்தை ஆரம்பித்ததில் இருந்து ஆறு மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு ஒரு முறை கண்ணாடியின் சக்தி (power) மாறிக் கொண்டே இருக்கும். கண்ணின் பார்க்கும் திறன் மாற்றமடையும் அல்லது தலைவலி, மயக்கம் போன்றவை உண்டாகும். இது மூக்குக் கண்ணாடி அணியும் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
உண்மை என்னவென்றால் கண்ணாடியின் திறன் மாறுவதில்லை மாறாக கண்கள் தான் அதன் பார்க்கும் திறனை இழந்துக் கொண்டிருக்கின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் மூக்குக் கண்ணாடி அணியும் அனைவருக்கும் கண்கள் மேலும் பழுதடைந்து கொண்டே இருக்கும்.
கண் கோளாறுக்குத் தீர்வுகள்
எந்த ஒரு உடல் உபாதைக்கும், உடலின் தொந்தரவுக்கும் தீர்வு என்பது அந்தத் தொந்தரவைச் சரி செய்வதாக, அந்தத் தொந்தரவைக் குணப்படுத்துவதாகத் தான் இருக்க வேண்டுமே ஒழிய அதை மறைப்பதாக இருக்கக் கூடாது. கண்களின் பார்க்கும் திறன் குறையும் போது கண்ணாடி அணிவது கண் கோளாற்றைக் குணப்படுத்தும் வேலை இல்லை மாறாக அந்தக் கண் கோளாற்றை மறைக்கும் செயல். கண்கள் ஏன் பார்க்கும் திறனை இழந்தன என்பதைக் கண்டறிந்து அதைச் சரி செய்வதன் மூலமாகத்தான் கண் பார்வையைச் சரி செய்ய முடியுமே ஒழிய கண்ணாடி அணிவது எப்போதுமே ஒரு நல்ல தீர்வாக இருக்காது.
கண் பார்வைக் கோளாற்றைக் குணப்படுத்தும் வழிமுறைகள்
மூக்குக் கண்ணாடி அணியும் பழக்கம் உள்ளவர்கள் முதலில் கண்ணாடியைக் கழட்டிவிட வேண்டும். குழந்தைகளுக்கு மூக்குக் கண்ணாடி மாட்டிவிட்ட பெற்றோர்கள் தயவுசெய்து முதலில் அதைக் கழட்டிவிடுங்கள்.
மூக்குக் கண்ணாடி இல்லாமல் பார்த்துப் பழகுங்கள், உங்கள் பிள்ளைகளையும் கண்ணாடி இல்லாமல் பார்க்கப் பழக்குங்கள். பள்ளிக் கூடங்களிலும், வேளை இடங்களிலும், வாகனம் ஓட்டும் போதும், அவசரக் காலங்களிலும் மட்டும் மூக்குக் கண்ணாடி பயன்படுத்துங்கள். மற்றபடி வீட்டில் இருக்கும் போது பார்வை தெளிவில்லாமலும் மங்கலாக இருந்தாலும் கூட மூக்குக் கண்ணாடி இல்லாமல் பார்த்துப் பழகுங்கள். உங்கள் பார்வையின் திறன் படிப்படியாக மேம்படும்.
கண் பார்வையை பாதுகாக்க
கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள் எந்த இரசாயன ஊசி மருந்துகளும் பயன்படுத்தாவிட்டால், பிறக்கும் குழந்தை எந்த உடல் உபாதையும் இல்லாமல் ஆரோக்கியமாகப் பிறக்கும். உடலின் திறனையும், கண் பார்வைத் திறனையும் கெடுக்கக் கூடிய இரசாயன மருந்துகளைக் கண்டிப்பாக நிறுத்த வேண்டும். எந்த உடல் உபாதைக்கும் இரசாயனங்களைப் பயன்படுத்தக் கூடாது.
வானம், மரம், செடி கொடி, போன்ற இயற்கைக் காட்சிகளை அதிக நேரம் கண்டு ரசியுங்கள். தினம் மூன்று முறையாவது கண் விழிகளைப் பச்சைத் தண்ணீரால் கழுவுங்கள். ஆறு குளம் போன்ற இயற்கை நீரோடைகளில் மூழ்கி கண்களைத் திறந்து பாருங்கள், கண் விழிகளைக் கழுவுங்கள். உணவில் கீரை வகைகளைத் தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
புளிப்பான உணவு வகைகளைத் தவிர்த்துவிடுங்கள். தோசை, இட்லி, வடை, பரோட்டா, ரொட்டி, பன், கேக், போன்று மாவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். இனிப்பான பழங்களையும், காய்கறிகளையும் அதிகமாக உட்கொள்ளுங்கள். மேலே குறிப்பிட்டவற்றை பின்பற்றினால் படிப்படியாகக் கண் பார்வை மேம்படும், பார்வை தெளிவாகத் தெரியும்.