தியானம்

மூச்சுப்பயிற்சி செய்யும் வழிமுறைகள்

1. விரிப்பு, பாய், அல்லது தடிமனான துணியை விரித்து தரையில் வசதியாக அமர்ந்து கொள்ளவும்.

2. தரையில் அமர்வது கடினமாக இருந்தால் நாற்காலி அல்லது சோபாவில் அமர்ந்து கொள்ளலாம். ஆனால் சாயாமல் நேராக அமர வேண்டும்.

3. முதுகுத் தண்டை நேராக வைத்துக் கொள்ள வேண்டும்.

4. இறுக்கம் இல்லாமல், அமைதியாகவும் தளர்வாகவும் அமரவும்.

5. பயிற்சியை வற்புறுத்தி அல்லது சிரமப்பட்டு செய்யக்கூடாது.

மூச்சுப் பயிற்சி முறைகள்

1. ஆழமாக மூச்சை இழுத்து, மெதுவாகவும் மென்மையாகவும் வெளியில் விடவும், 3 முறைகள்.

2. மூக்கின் வலது துவாரத்தை விரலால் அடைத்துக் கொண்டு, இடது துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும், பின்பு மென்மையாக வெளியில் விடவும், 3 முறைகள்.

3. மூக்கின் இடது துவாரத்தை விரலால் அடைத்துக் கொண்டு வலது துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும், பின்பு மென்மையாக வெளியில் விடவும், 3 முறைகள்.

4. மூக்கின் வலது துவாரத்தை அடைத்துக் கொண்டு இடது துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும், பின்பு இடது துவாரத்தை அடைத்துக் கொண்டு, வலது துவாரம் வழியாக மென்மையாக மூச்சை விடவும், 3 முறைகள்.

5. மூக்கின் இடது துவாரத்தை அடைத்துக் கொண்டு வலது துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும், பின்பு வலது துவாரத்தை அடைத்துக் கொண்டு, இடது துவாரம் வழியாக மென்மையாக மூச்சை விடவும், 3 முறைகள்.

6. மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து, இயன்ற வரை மூச்சை உள்ளேயே அடக்கிக் கொள்ளவும். பின்பு மெதுவாக வெளியில் விடவும், 3 முறைகள்

7. இப்போது தியானத்தைத் தொடங்கவும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X