ஆன்மீகம்

மெய்ப்பொருள் தினசரி பிரார்த்தனை

Black and White Photo of Praying Hands

அனைத்திற்கும் மூலமான மெய்ப்பொருளே
அனைத்திலும் நிறைந்த அருட்பெரும் ஜோதியே
எங்கும் நிறைந்திருக்கும் பேராற்றலே, இறைவா
உன்னிடமே நாங்கள் உதவியை நாடுகிறோம்
நீயே எங்களின் தாயும் தந்தையும் தெய்வமும்
குருவுமாக இருந்து வாழ்நாள் முழுவதும் வழிகாட்டி
எங்களைப் பாதுகாக்க வேண்டும், நீயே துணை

அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும்
தெரிந்தும் தெரியாமலும் நாங்கள் செய்த அனைத்துப்
பாவங்களையும் மன்னித்து அருள வேண்டும்.
உன்னைவிட மன்னிப்பார் எங்களுக்கு வேறில்லை

இன்று வரையில் நீ எங்களுக்கு வழங்கிய – உனது
அன்புக்கும், அருளுக்கும், வழிகாட்டுதலுக்கும்
செல்வத்துக்கும், ஆரோக்கியத்துக்கும்,
மேலும் அனைத்திற்கும் நன்றி நன்றி நன்றி.
மேலும் உன் கருணையினால் எங்களுக்கு
இறுதி நாள் வரையில் கிடைக்கவிருக்கும்

அன்புக்கும் கருணைக்கும்
பாதுகாப்புக்கும் ஆசீர்வாதத்திற்கும்
தெளிவான கல்விக்கும்
நன்மதிப்புக்கும்
நிலையான புகழுக்கும்
சீரான ஆரோக்கியத்துக்கும்
உடலின் ஆற்றலுக்கும்
மனோபலத்துக்கும்
காரியங்களில் வெற்றிக்கும்
வாழ்க்கையில் வளர்ச்சிக்கும்
குடும்ப மகிழ்ச்சிக்கும்
வாரிசுகளின் வளர்ச்சிக்கும்
போதிய செல்வத்துக்கும்
நிலையான உணவுக்கும்
இன்பத்துக்கும் மகிழ்ச்சிக்கும்
தெளிவான அறிவுக்கு
என்றும் இளமைக்கும்
துணிவுக்கும் தைரியத்துக்கும்
நீண்ட ஆயுளுக்கும்
மெய்ஞ்ஞானத் தெளிவுக்கும்
மெய்ப்பொருள் உணர்வுக்கும்
அனைத்திற்கும் அனைவருக்கும்
நன்றி நன்றி நன்றி.

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அனைத்திற்கும் நன்றி
அனைவருக்கும் நன்றி
நன்றி நன்றி நன்றி