மருத்துவத்தால் சுரண்டப்படும் பொருளாதாரம். இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களுக்கு, வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தைச் சம்பாதிப்பது கடினமாக இருக்கிறது. வாழ்வியல் செலவுகள் அதிகரித்துவிட்டதினால் பெரும்பாலும் பணத்தைச் சேமிக்க வழியில்லாமல், வரவுக்கும் செலவுக்கும் சரியாகவே இருக்கிறது. அனைத்தையும் மீறி பணத்தைச் சேர்த்தால், ஒன்று உழைத்தவன் அனுபவிக்க வேண்டும் அல்லது அவன் குடும்பம் அனுபவிக்க வேண்டும், அதுதானே நியாயம்?
இரண்டும் இல்லாமல், பெரும்பாலான மனிதர்கள் முதுமை காலத்தில் உண்டாகும் நோய்களுக்கு மருத்துவம் செய்கிறேன் அல்லது அறுவை சிகிச்சை செய்கிறேன் என்ற பெயரில், சில மருத்துவ கூட்டத்தாரிடம் கஷ்டப்பட்டுச் சேர்த்த செல்வங்களை பறிகொடுத்து விடுகிறார்கள். சேர்த்த செல்வம் அனைத்தும் மருத்துவமனைகளுக்கு கொடுத்தாகி விட்டது பரவாயில்லை, அதற்குப் பலனாக உடலின் ஆரோக்கியமாவது திரும்பியதா என்றால் அதுவும் இல்லை.
எனக்குத் தெரிந்த சில செல்வந்தர்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்புக்கள் அனைத்தையும் மருத்துவத்திற்கும் அறுவை சிகிச்சைக்கும் செலவழித்துவிட்டுக் கஷ்டப்படுகிறார்கள் சிலர் இறந்து விட்டார்கள். சிலர் பத்து லட்சங்களுக்கு மேல் சிறப்பு மருத்துவமனைகளில் செலவு செய்துவிட்டு மரணிக்கிறார்கள். அதற்கு அவர்கள் வீட்டில் மரணித்திருந்தால் மருத்துவமனைக்குக் கொடுத்த பத்து லட்சம் அவர்களின் குடும்பத்துக்காவது உதவும். இந்த கூற்றை ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருக்கலாம், ஆனாலும் இது சாத்தியமான வார்த்தை. மனிதனாகப் பிறந்த அனைவரும் மரணிக்க வேண்டியது இயற்கையின் நியதி அல்லவா?
Leave feedback about this