மருந்துகள் என்பன உட்கொள்ள கூடிய பொருட்களில் இருந்து, அதாவது மலர்கள், பழங்கள், இலைகள், தழைகள், தண்டுகள், வேர்கள், போன்ற இயற்கையான பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட வேண்டும். அந்த மருந்துகள் நோயாளிகளுக்கு மருந்தாகவும், நோய் இல்லாதவர்களுக்கும், அதிகமாக உட்கொண்டவர்களுக்கும், உணவாகவும் செயல்புரிய வேண்டும்.
இரசாயனங்கள் உணவல்ல, அவற்றை உட்கொண்டாலும் அவற்றை ஜீரணிக்கும் தன்மை மனித உடலுக்கு கிடையாது. ஆங்கில மருந்துகள் பெரும்பாலும் இரசாயனங்களிலிருந்தே தயாரிக்கப்படுகின்றன. ஒரு இரசாயனம் பெரிய தீங்கை விளைவிக்காமல் இருக்கலாம். ஆனால் இரண்டு அல்லது மூன்று மாத்திரைகளை ஒன்றாக உட்கொள்ளும் போது. பல இரசாயனங்கள் ஒன்றாக வயிற்றுக்குள் செல்கின்றன. பல இரசாயனங்கள் ஒன்றாக உடலுக்குள் செல்லும் போது அவை என்ன விளைவுகளை உருவாக்கும் என்பது மருத்துவர்களுக்குக் கூட தெரியாது.
சிலர் ஐந்து முதல் பத்து மாத்திரைகளை ஒரே நேரத்தில் விழுங்குகிறார்கள். இந்த பத்து வெவ்வேறான இரசாயன கலவைகள் ஒன்றாகச் சேரும் போது நிச்சயமாக பெரிய தீங்குகளை உண்டாக்கும்.
Leave feedback about this