ஆண்கள்

மருந்து மாத்திரைகளால் உண்டாகும் ஆண்மைக் கோளாறு

Man Sitting on Sofa and Taking Medication

மருந்து மாத்திரைகளால் உண்டாகும் ஆண்மைக் கோளாறு. தலைவலிக்கு உட்கொள்ளும் மாத்திரை தொடங்கி, உடலின் தொந்தரவுகளுக்கு உட்கொள்ளும் மாத்திரைகள் வரையில் அனைத்து வகையான இரசாயன மருந்து மாத்திரைகளும் பக்க விளைவுகளை உருவாக்கி உடலையும் ஆண்மையையும் பாதிக்கக் கூடியவை.

நீங்கள் உட்கொள்ளும் மாத்திரையின் அளவு சிறியதாக இருந்தாலும் அது விளைவிக்கும் பக்கவிளைவின் அளவு பெரிதாக இருக்க வாய்ப்பு அதிகம். அவற்றின் பாதிப்புகளும் பக்கவிளைவுகளும் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

இரசாயனம் கலந்த உணவுகள், பானங்கள், பொருட்கள் மற்றும் மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்களின் உடலில் சேரும் இரசாயனங்களை வெளியேற்றுவதிலேயே அதிகமாக உடலின் ஆற்றல் விரயமாவதால் உடல் உறவு கொள்ளும் அளவுக்கு உடல் பலமும் மன பலமும் இருப்பதில்லை. அதையும் மீறி முயற்சிக்கும் போது முழுமையாக ஈடுபட பெரும்பாலும் முடிவதில்லை.