பெண்ணே! என்னை
மறந்துவிடு என்றாயே…
அதற்கு வாய்ப்பில்லை
என்னால் இயலவில்லை
உன்னை மனதிலிருந்து
வெளியேற்ற முயன்றேன்
கண்ணீரை மட்டுமே
வெளியேற்ற முடிந்தது
மறந்துவிடு என்று
கூறுவதற்குப் பதிலாக
இறந்துவிடு என்று
கூறியிருக்கலாம்
உன்னை மறப்பதும்
உயிரைத் துறப்பதும்
வெவ்வேறாக தெரியவில்லை
எனக்கு இரண்டும் ஒன்றுதானே