நோய்கள்

மனிதர்களுக்கு உண்டாகும் நோய்கள்

மனிதர்களுக்கு உண்டாகும் நோய்கள். உடலில் தொந்தரவுகள் உள்ள அனைவருக்கும் நோய் கண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எந்த நோயும் இல்லாதவருக்கும் உடலில் தொந்தரவுகள் இருக்கலாம். நோய்கள் என்று நாம் நம்புபவை பெரும்பாலும் உடலில் உண்டாகும் அறிகுறிகள் அல்லது தொந்தரவுகளைத் தான். உண்மையைச் சொல்வதானால் நோய்கள் பெரும்பாலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.

உதாரணத்திற்கு ஒருவருக்கு வலி உண்டாகும் வரையில் அவர் உடலில் வளரும் கட்டி வெளியில் தெரிவதில்லை. அதற்காக அவர் உடலில் கட்டி இல்லை என்றும் அர்த்தமில்லை. கட்டி வளர தொடங்கி அது வலியாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ள சில வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் அந்த உடலில் கட்டி வளரும் வேளைகளில் எந்த தொந்தரவும் இருப்பதில்லை. பெரும்பாலும் அந்த மனிதரால் அதனை உணரக் கூட முடிவதில்லை. அதைப்போன்றே உடலில் எந்த நோயும் இல்லாதவருக்கும் உடலில் கழிவுகள் அதிகரிக்கும் போதும், உடலில் இயக்க சக்தி குறையும் போதும், வலி உண்டாகலாம்.

இவற்றின் மூலம் நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால் உடலின் தொந்தரவுகள் என்பவை நோயின் அறிகுறிகள் அல்ல, அவை உடலின் இயக்கத்தில் பாதிப்பு உண்டாகி உள்ளது அல்லது நோய் குணமாகத் தொடங்கியுள்ளது என்பதன் அறிகுறிகள். உடலில் தொந்தரவுகள் உருவானால் அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமே ஒழிய அவற்றைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. முன்பே குறிப்பிட்டதைப் போன்று உடலில் உண்டாகும் பாதிப்புகள் என்பவை, உடலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாற்றங்களையும் செயல்பாடுகளையும் நமக்கு உணர்த்துகின்றன. உடலில் உண்டாகும் வலி வேதனைகளைக் கொண்டே, உடலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல்களையும் மாற்றங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

அதனால் வலி வேதனைகள் நன்மையான விசயங்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். காரணம் உடலில் உருவாகிக் கொண்டிருக்கும் நோய்கள் பெரும்பாலும் முற்றும் வரையில் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஒருவேளை உடல் எந்த வலி வேதனைகளையும் உணர்த்தவில்லை என்றால், உடலில் நோய் வளர்ந்து கொண்டிருப்பது தெரியாமல் போகும். அந்த நோய் முற்றி ஆபத்தான நிலையில் தான் உணர்ந்து கொள்ள முடியும். தொடக்க நிலையிலேயே உடலில் உண்டாகும் மாற்றங்களையும், வலி வேதனைகளையும் புரிந்து கொண்டு செயல்பட்டால்; உடலை நோயின் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். இறுதி வரையில் நோய் நொடிகள் இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.

உடலில் தொந்தரவுகள் உருவானால் உடலின் கட்டளைகளைப் புரிந்து கொண்டு, உணவைக் குறைத்து, உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். உடலும், மனமும், புத்தியும், இணைந்து ஒரே பாதையில் பயணித்தால் விரைவாகவும் எளிதாகவும் நோய்கள் குணமாகி ஆரோக்கியம் திரும்பிவிடும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field