மனிதர்களின் நம்பிக்கைகளும் பாதிப்புகளும். இந்த பூமியில் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் மனப் பதிவுகள் இல்லாமல் வெற்று காகிதமாகத் தான் பிறக்கிறார்கள். பிறந்த நாள் முதலாக தன்னை சுற்றி இருக்கும் மனிதர்களால் கவரப்பட்டு அவர்களைப் பின்பற்றத் தொடங்குகிறார்கள். அவர்கள் பின்பற்றும் முக்கியமான விசயங்களில் ஒன்று மத நம்பிக்கைகள்.
ஒரு இந்துவுக்குப் பிறந்த குழந்தை முஸ்லிம் வீட்டிலும், முஸ்லிமுக்குப் பிறந்த குழந்தை கிறிஸ்துவர் வீட்டிலும், கிறிஸ்துவருக்குப் பிறந்த குழந்தை இந்து வீட்டிலும் வளர்ந்தால், அந்த குழந்தைகள் எந்த மதத்தைப் பின்பற்றுவார்கள்? பெற்றோர்களின் மாத்தையா, வளர்த்தவர்களின் மதத்தையா?
ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த குழந்தை ஆதிக்க சாதியினர் வீட்டிலும், ஆதிக்கச் சாதியில் பிறந்த குழந்தை ஒடுக்கப்பட்டவர் வீட்டிலும் வளர்ந்தால், அவர்களின் குணாதிசயங்களும் வாழ்க்கை முறைகளும் எப்படி இருக்கும்? அந்த குழந்தை பிறந்த சாதியைப் பின்பற்றுமா, வளர்ந்த சாதியைப் பின்பற்றுமா?
எல்லா குழந்தையும் வெற்று காகிதமாக மனமின்றி இந்த மண்ணில் பிறப்பதனால், சுயமாகச் சிந்திக்கத் தொடங்குவதற்கு முன்பாக, யார் எதை கற்றுக் கொடுத்தாலும் அப்படியே நம்பி ஏற்றுக் கொள்கிறார்கள்.
சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் திறன் உருவான பிறகு, ஒரு மதத்தினால் அல்லது நம்பிக்கையினால் கவரப்பட்டு அதனைப் பின்பற்றத் தொடங்கினால் ஒழிய; மற்ற அனைவரும் தங்களின் பெற்றோர்களின் செயல்களையும் நம்பிக்கைகளையும் உள்வாங்கிக் கொண்டு அவற்றினால் கவரப்பட்டு தற்போதைய மதத்தைப் பின்பற்றுபவர்களே.
இன்று இனம், மதம், சாதி, என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கும் மனிதர்கள் அனைவரும் தன்னை சுற்றி வாழ்ந்த மனிதர்களின் நம்பிக்கைகளில் நம்பிக்கைக் கொண்டு, மற்றவர்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களே. இதை போன்ற ஒரு முட்டாள் தனம் இந்த பூமியில் இல்லை.
Leave feedback about this