மனம்

மனிதர்களின் குணாதிசயங்கள்

மனிதர்களின் குணாதிசயங்கள். நாம் காணும் மனிதர்களின் குணாதிசயங்கள். ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடம் காணும் குணாதிசயங்கள், பெரும்பாலும் கண்ணாடியின் பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. ஒரு மனிதனின் உண்மையான குணாதிசயம் அவரின் மனதுக்குத் தெரியுமல்லவா? அதனால் அந்த குணாதிசயம் மற்றவர்களிடமும் இருக்கும் என்று அவர் மனம் சந்தேகம் கொள்கிறது. கெட்டவர்கள் அனைவரையும் கெட்டவர்கள் என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள், நல்லவர்கள் அனைவரையும் நல்லவர்கள் என்ற கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள், இரண்டுமே தவறுதான். அப்பாவிகள் அனைவரையும் நம்பி ஏமாறுவதும் இதனால் தான்.

இந்த உலகில் யாருமே முழுமையான நல்லவர்களும் கிடையாது, முழுமையான கெட்டவர்களும் கிடையாது. அனைவரும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடிக்கவும் நடந்துகொள்ளவும் செய்கிறார்கள். பழைய பதிவுகளையும், அனுபவங்களையும் கொண்டு பிற மனிதர்களை எடைபோடாமல், எந்த முன்முடிவும் இன்றி மனிதர்களை அணுகத் தொடங்கினால் மனிதர்கள் இடையிலான அன்பும், புரிதலும், ஒற்றுமையும் அதிகரிக்கும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X