அவன் திமிர் பிடித்தவன், அவன் கெட்டவன், அவன் பொறாமை பிடித்தவன், என்று மற்றவரை குற்றஞ்சாட்டுவது, தங்களுடைய குணங்கள் பிற மனிதர்களிடமும் இருக்கும் என்று நம்புவதால் ஏற்படும் விளைவு தான்.
பிற மனிதர்களிடம் நாம் காணும் குணாதிசயங்கள், பெரும்பாலும் வெறும் கண்ணாடியைப் போன்ற பிரதிபலிப்பாகவே இருக்கின்றன. நம்முடைய குணாதிசயங்களை தான் நாம் பெரும்பாலும் பிறரிடம் காண்கிறோம்.
மேலும் பெரும்பாலான மனிதர்கள் தனது ஆசையும் தேவையும் நிறைவேறினால் போதும் என்று இருப்பதால், மற்றவர்களைப் பற்றி சிந்திக்காமல் சுயநலவாதிகளாகவும் தீயவர்களாகவும் இருக்கிறார்கள்.