மனிதர்கள் தாங்கள் செய்த பாவங்களுக்கு தண்டனையை அனுபவிப்பதற்காக குறைகளுடன் பிறக்கிறார்கள். அதாவது முந்தைய பிறவிகளில் மற்றவர்களை ஊனப்படுத்தியவர்களும், மற்றவர்களை கொடுமைப் படுத்தியவர்களும், கொலை செய்தவர்களும், அந்த பாவச் செயல்களுக்கு தண்டனையாக இந்தப் பிறவியில் குறைகளுடன் பிறக்கிறார்கள்.
இந்த பிறவியில் குறைகளுடன் பிறந்ததற்கும், அனுபவிக்கும் வேதனைகளுக்கும் ஏதோ ஒரு பிறவியில் செய்த தவறுகள் தான் காரணம் என்பதைப் புரிந்து கொண்டு; உள்ளதை உள்ளவாறு ஏற்றுக்கொண்டால். இதுவரையில் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் பாவமன்னிப்பு தேடினால், அடுத்த பிறவி மகிழ்ச்சியான பிறவியாக அமையும்.
பழைய கர்மாக்கள் இல்லாமல் இருந்தாலும், சில வேளைகளில் கர்ப்ப காலங்களில் நடக்கும் தவறுகளும் குழந்தைகள் குறைகளுடன் பிறப்பதற்கு காரணமாக அமையலாம்.