ஆரோக்கியம்

மனிதனின் உண்மையான ஆரோக்கியம்

மனிதனின் உண்மையான ஆரோக்கியம். ஒரு மனிதனின் உண்மையான ஆரோக்கிய நிலையை உடலின் வெளிப்புறத்தை மட்டுமே கணக்கில் கொண்டு அறிந்துகொள்ள முடியாது. உடலின் வெளிப் பகுதி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், உடலின் வெளியில் குறிப்பிடும் அளவுக்கு பாதிப்புகள் இல்லாமல் இருந்தாலும் கூட ஒரு நபர் நோய் கொண்டவராக இருக்கலாம்.

ஆரோக்கியம் என்று சொன்னாலே முழுமையான ஆரோக்கியம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். உடலின் உள்ளும், புறமும், மனமும் ஆரோக்கியமாக தடைகளின்றி தனது இயல்பில் இயங்க வேண்டும். தோலின் அழகை, அல்லது முகத்தின் அழகை மட்டும் கணக்கில் கொண்டு ஆரோக்கியத்தை அளக்கக் கூடாது.

அண்மையில் நடிகை ஸ்ரீதேவி மரணமடைந்தார். அவர் மரணமடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு வரையில் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தால், பார்ப்பதற்கு ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருந்தார். ஆரோக்கியமாக இருப்பதைப் போல் தெரிந்த அவர் ஏன் திடீரென்று மரணமடைந்தார்? அவரின் மரணத்திற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன, ஆனாலும்.

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் மூன்று முக்கியமான விசயங்களை நமக்கு அறிவிக்கிறது. ஒன்று மனிதனின் வயதுக்கும் மரணத்துக்கும் சம்பந்தமில்லை, யாருக்கும் எப்போதும் மரணம் வரலாம். இரண்டு, உடலின் வெளியிலிருந்து நாம் காணும் ஆரோக்கியத்துக்கும் உடலின் உள்ளே இருக்கும் ஆரோக்கியத்துக்கும் சம்பந்தமில்லை. தோல் அழகாக பளபளப்பாக இருக்கலாம் ஆனால் உடலின் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இல்லை என்றால் நோயும் மரணமும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். மூன்றாவது இரசாயனங்கள் எப்பொழுதும் மனிதனுக்கு ஆரோக்கியத்தைத் தருவதில்லை.

இவை மூன்றும், நம் கண்களின் முன்பும், நம்மைச் சுற்றியும், பலருக்கு நடக்கும் விசயங்கள்தான், ஆனாலும் ஒரு பிரபல நடிகைக்கு நடந்தால்தான் நமக்குப் புரிகிறது. அழகாக இருப்பதற்காக கிரீம், எண்ணெய், சோப்பு மற்றும் பல இரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதும். உடலில் ஏதாவது உபாதைகள் ஏற்பட்டால் மருந்து என்று நம்பி இரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படும் ஆங்கில மருந்துகளை உட்கொள்வதும் நமக்கு வாடிக்கையாகி விட்டது. இவை தவறு என்பதை ஒரு நடிகையின் மரணம் நிரூபித்துவிட்டது.

ஒரு மனிதனின் உடலில் இருக்கும் அத்தனை வகையான தொந்தரவுகளையும் அவன் முகத்தை மட்டுமே பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். ஒரு மனிதனின் உடலின் தன்மைகளையும் அவன் உடலின் ஆரோக்கியத்தையும்; முகப்பொலிவையும், முகத்தில் உண்டாகும் மாற்றங்களையும் கொண்டு கண்டுகொள்ளலாம். இது இயற்கையின் வடிவமைப்பு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழியை பொய்யாக்கி விட்டார்கள் ஆங்கிலேயர்கள்.

ஆங்கிலேயர்கள் உருவாக்கிய இரசாயன அழகு சாதனங்கள், இயற்கையின் வடிவமைப்பை மாற்றிவிட்டன. உடலின் உள்ளே ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் அந்த நபரின் வெளித்தோற்றம் மட்டும் அழகாக இருக்கிறது. இது ஒரு தவறான செயல், காரணம் அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு தன் உடலில் உபாதைகள் இருக்கின்றன என்பதை கண்டுகொள்ள முடியாமல் போகிறது. உதாரணத்திற்கு சில வேளைகளில் நம்மைச் சுற்றி இருப்பவர்களின் முகத்தைப் பார்த்து அவர் ஏதோ ஒரு தொந்தரவில் இருக்கிறார் என்று கண்டு கொள்வோம் அல்லது மற்றவர்கள் நமது தொந்தரவுகளைக் கண்டுகொள்வார்கள். இரசாயனங்களின் பயன்பாட்டிற்குப் பின் இது முடியாமல் போகிறது.

முகத்திலும் உடலிலும் நீங்கள் தேய்க்கும் அனைத்தும் உங்கள் உடலின் உள்ளுறுப்புகளுக்கும் செல்கின்றன என்பது அப்பட்டமான உண்மை. அதற்கு உதாரணம் வயிறு உப்புசமாக அல்லது வயிற்று வலியாக இருந்தால் வயிற்றில் தைலங்களைத் தேய்க்கும் போது வயிற்றின் உள்ளே மாற்றங்கள் தெரிகிறன அல்லவா? கால் அல்லது மூட்டு வலியாக இருக்கும் போது அவற்றின் மேல் பூசும் தைலங்கள், உள்ளே உணரும் வலியின் தன்மைகளை மாற்றுகிறது அல்லவா? இந்த உதாரணம் போதாதா, நாம் உடலின் மேற்பரப்பில் தேய்க்கும் விசயங்கள் உடலின் உள்ளே செல்கின்றன, மேலும் சில மாற்றங்களை உண்டாக்குகின்றன என்பதற்கு.

அழகுசாதனப் பொருட்கள்

சோப்பு, சாம்பு, பற்பசை, எண்ணெய், வாசனைத் திரவியங்கள் போன்றவை அவற்றைப் பயன்படுத்துபவர்களின் உடலின் உள்ளே ஊடுருவுகின்றன. மேலும் அவை பல கேடுகளை உருவாக்குகின்றன. குறிப்பாக பெண்கள் பயன்படுத்தும் சிவப்பழகு கிரீம், பருக்களைப் போக்கும் கிரீம், மற்றும் மற்ற அழகுசாதனப் பொருட்கள், பெரும்பாலும் இரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவை பெண்களின் ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கின்றன குறிப்பாக, வயிறு, கல்லீரல், தோல், மற்றும் கர்ப்பப்பையை வெகுவாகப் பாதிக்கின்றன. இன்று பெண்கள் அனுபவிக்கும் மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கட்டிகள், கர்ப்பப்பை கோளாறுகள், உடல் பருமன், மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கு அவர்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன.

மறுபடியும் சொல்கிறேன், இன்றைய மனிதர்கள் அனுபவிக்கும் பெரும்பாலான உடல் உபாதைகளுக்கும், நோய்களுக்கும் அவர்கள் பயன்படுத்தும் இரசாயனங்கள் தான் காரணம். இரசாயனப் பயன்பாட்டை நிறுத்தும் வரையில் ஆரோக்கியம் திரும்பாது. இரசாயனப் பயன்பாட்டைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field