ரெய்கி

மனிதன் ஒரு அறிமுகம்

மனிதன் ஒரு அறிமுகம். ரெய்கி ஹீலிங் மற்றும் குணப்படுத்தும் கலைகளை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள், முன்னதாக மனிதன் என்றால் யார்? மனித உடல் என்பது என்ன? மனித உடல் எவ்வாறு இயங்குகிறது? என்பனவற்றை புரிந்துகொள்ள வேண்டும். மனிதன் என்பவன் பூதக் கண்களால் காணக்கூடிய பூதவுடல் மட்டுமே அல்ல, நான்கு வெவ்வேறு வகையான உடல்களின் கலவையே மனிதன்.

பூத உடல் (கண்களால் காணக்கூடிய உடல்), ஒளி உடல் (ஆரா), மனம் (எண்ணம் மற்றும் அலைகள்), ஆற்றல் (இயக்க சக்தி), இவற்றுடன் உயிரின் கலவைதான் மனிதன்.

மனிதனுக்கு நான்கு உடல்களையும் தாண்டி மேலும் சில விசயங்கள் இருந்தாலும், இந்த நான்கு உடல்கள்தான் மனிதர்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றன. இந்த நான்கு உடல்களும் தனது சுய இயக்கத்தில், மனிதனின் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் பாதுகாக்க தனது அளப்பரிய பங்கை ஆற்றிக் கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு உடலுக்கும் தனிப்பட்ட இயல்புகள் அமைந்திருந்தாலும், இந்த நான்கு உடல்களும் ஆரோக்கியமாகவும் சமநிலையுடனும் இயங்கும்போது மட்டுமே, ஒரு மனிதன் முழு ஆரோக்கியத்துடனும் நிம்மதியாகவும் வாழ முடிகிறது. இந்த நான்கு உடல்களும், ஒன்றோடு ஒன்று இணைந்தும், சார்ந்தும், உறுதுணையாகவும், உதவியாகவும் செயல்படுகின்றன.

உதாரணத்திற்கு:
ஒரு பூத உடல் முழுமை பெற்று இருந்தாலும், அதில் உயிர் இல்லாவிட்டால், அந்த உடலால் இயங்க முடியாது. அதை நாம் மனிதன் என்றும் ஏற்றுக்கொள்வதில்லை, அதனை பிணம் என்றே அழைக்கிறோம். உடலும் உயிரும் இணைந்து இருந்தும், அதன் புத்தி செயல்படவில்லை என்றால் மனநிலை பாதிக்கப்படுகிறார். அனைத்தும் இருந்தும் ஆற்றல் இல்லாவிட்டால் நோய்வாய்ப்படுகிறார்.

இவ்வாறு எந்த ஒரு உடலில் பாதிப்பு உண்டானாலும், அந்தப் பாதிப்பு மற்ற உடல்களின் இயக்கத்தை பாதிக்கிறது. ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மன அமைதியைப் பாதுகாக்கவும், சிறப்பான வாழ்க்கையை வாழவும், இந்த நான்கு உடல்களையும் பாதுகாப்பதும், ஆரோக்கியமாக வைத்திருப்பதும், மிகவும் அவசியமாகும்.

ரெய்கி ஹீலிங்கின் மூலமாக உடலின் ஆற்றலையும் ஆராவையும் பாதுகாக்கும் சீர்செய்யும் அதே வேளையில் இயற்கை மருத்துவங்களின் மூலமாக உடலையும் மனதையும் பாதுகாக்க வேண்டும். உடலையும் மனதையும் சீர் கெடுக்க கூடிய விசயங்களையும் தவிர்க்க வேண்டும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X