மனித உடலின் சக்ராக்கள் என்பவை என்ன? மனிதர்களின் உடலில் ஏழு சக்தி மையங்கள் அமையப்பெற்றுள்ளன, அவற்றை சக்ராக்கள் என்று அழைக்கிறோம். சக்ரா என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு சக்கரம் என்று பொருளாகும். ஆற்றல்களை உருவாக்குவதும், கிரகிப்பதும், சேமித்து வைப்பதும், தொடர்புடைய பகுதிகளுக்கு ஆற்றல்களைப் பகிர்ந்தளிப்பதும் அவற்றின் வேலைகளாகும்.
சக்ராக்களில் உண்டாகும் குறைபாடுகளும், ஆற்றல் தட்டுப்பாடுகளும், அவற்றுடன் தொடர்புடைய உறுப்புகள் முழுமையாக இயங்க முடியாமல் தடைகளையும், தொந்தரவுகளையும் உருவாக்குகின்றன. சக்ராக்களில் உண்டாகும் குறைபாட்டினால் மனிதர்களின் வாழ்க்கையில் சில பல சிக்கல்களும், தடங்கல்களும், நோய்களும், உருவாகின்றன.
மனித உடலும், மனமும், வாழ்க்கையும், ஆற்றலுடன் தொடர்புடையவை ஆதலால், ஆற்றலை உற்பத்தியும் வினியோகமும் செய்யும் சக்ராக்களை சீர்செய்வதன் மூலமாக மனிதர்களின் நோய்களையும், தொந்தரவுகளையும், துன்பத் துயரங்களையும் களைய முடியும்.
(மனிதர்களின் ஏழு சக்ராக்களும் அவற்றின் அமைவிடங்களும்)