மனித உடல் இயற்கையால் மிக அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. மனிதன் உட்கொள்ளும் ஒவ்வொரு வேளை உணவும், அந்த உணவிலிருந்து உருவாகும் சக்தியும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு உடலுக்குப் பயன்படுகிறது.
உடலில் உற்பத்தியாகும் சக்தியில் 32% உடலின் இயக்கத்திற்கும், 32% உணவின் செரிமானத்திற்கும், 32% உடலின் பாதுகாப்பிற்கும் உபாதைகளைக் குணப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்களுக்குப் பின்பு மீதமிருக்கும் சக்தி, சேமிப்பு சக்தியாகவும், அவசரகால சக்தியாகவும், உடலில் சேமிக்கப்படுகிறது.
மீதமிருக்கும் சேமிப்பு சக்திகள்தான் மனிதனின் அவசரக் காலத்தில் பயன்படுகிறது, உதாரணத்துக்கு நாய் துரத்தினாலோ, விபத்து நடந்தாலோ, உயிருக்கோ, உடைமைக்கோ அச்சுறுத்தல் உண்டானாலோ, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உடல் சேமிப்புச் சக்தியைப் பயன்படுத்துகிறது. இரசாயன மருந்துகளை நெடுநாட்களுக்கு உட்கொள்பவர்களுக்கு சேமிப்பு சக்தி என்று எதுவுமே இருக்காது. அதனால் தான் நெடுநாட்களாக ஆங்கில மருந்துகள் உட்கொள்பவர்கள், கொடிய உயிர்க்கொல்லி நோய்களுக்கு எளிதாக ஆளாகிறார்கள். அல்லது ஏதாவது நோய் உண்டானால் முழுவதுமாக உடலாலும், மனதாலும் உடைந்து, சோர்ந்துவிடுகிறார்கள்.
பாதுகாப்பு சக்தியை (இம்யூன் சிஸ்டம்) பலப்படுத்தும் வழிமுறைகள்
மனித உடலில் உருவாகும் எல்லா சக்திகளும் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு செயல்படுகின்றன என்று மேலே பார்த்தோம். அதனால் தேவையற்ற உடல் உழைப்பைக் குறைத்து, ஓய்வெடுத்தால் உடலில் இயக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட 32% சக்தி சேமிக்கப்படும், உடலுக்கு ஒத்துக் கொள்ளக் கூடிய எளிமையான உணவுகளை மட்டுமே உட்கொண்டால் உணவு செரிமானத்துக்கு ஒதுக்கப்பட்ட 32% சக்தியும் மிச்சமாகும். இப்படி உழைப்பிலும், உணவிலும் செலவழிக்க கூடிய சக்திகளைச் சேமித்தல். சேமித்த சக்திகள் அனைத்தும் முழுமையாக உடல் உபாதைகளைக் குணப்படுத்தும் செயலுக்கு வழங்கப்படும். உடலின் இம்யூன் சிஸ்டம் பலப்படும்.
இதை விட்டுவிட்டு, எந்த மருந்து மாத்திரைகள் உட்கொண்டாலும் பாதுகாப்பு சக்தியை (இம்யூன் சிஸ்டம்) பலப்படுத்த முடியாது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் மனித உடல் முழுமையாக தானியங்கியாக (Automatic) செயல்படும் முறையில் தான் இறைவன் வடிவமைத்திருக்கிறார். யாராலும் ஒன்றும் செய்ய முடியாது, எல்லாம் உடலின் செயல்.