மனதால் உருவாகும் நோய்களின் உதாரணங்கள். ஒருவர் மழையில் நனைந்தால் காய்ச்சல் உருவாகும் என்று நம்பிக்கை கொண்டிருந்தால், ஆரோக்கியமான உடல் இருந்தாலும் அவர் நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்தால், மழையில் நனைந்தால் காய்ச்சல் உருவாகும். இதே விளைவுதான் குளத்தில் குளித்தால் சளி பிடிக்கும், மண்ணில் விளையாடினால் புண்கள் உருவாகும் போன்ற நம்பிக்கைகளுக்கும், நம்பிக்கை கொண்டோருக்கு மட்டும் அவ்வாறு நடக்க வாய்ப்புகள் உள்ளன.
அதைப்போலவே வயதானால் கண் பார்வை குறையும், கேட்கும் திறன் குறையும், மூட்டு வலி உருவாகும், முதுகில் கூன் விழும், நீரிழிவு நோய் உருவாகும், இரத்தக் கொதிப்பு உருவாகும், அது வரும், இது வரும் என்று அடுத்தவர்கள் கூறுவதை, யாரெல்லாம் நம்பிக்கைக் கொண்டார்களோ, அவர்களுக்கு அவர்களின் நம்பிக்கையின் அளவு பாதிப்புகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.
என் குடும்பத்தில் பலருக்கு இந்த நோய் உள்ளது அதனால் எனக்கும் உருவாக வாய்ப்பு உள்ளது என்று நம்புவோர்க்கு மட்டும் அவ்வாறான குடும்ப நோய் உருவாகக் கூடும். இது பரம்பரை நோய் என் தாத்தா பாட்டிக்கு இருந்தது, என் பெற்றோருக்கு இருந்தது அதனால் எனக்கும் உருவாக வாய்ப்புகள் உள்ளன என்று நம்பிக்கை கொண்டோருக்கு, அந்த குறிப்பிட்ட நோய் உருவாக வாய்ப்புகள் உள்ளன.
என் நோய் குணமாகாது, கடைசி வரையில் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்று டாக்டர் சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பிக்கை கொண்டவர்களின் நோய்கள் குணமாவது மிகக் கடினம்.
இவ்வாறு மற்றவர்கள் கூறியதையும், எங்கோ வாசித்ததையும் நம்பிக்கை கொண்டு உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். நான் ஆரோக்கியமாக வாழ்வேன் என்று உறுதியாக இருப்பவருக்கு எந்த நோயும் உருவாகாது. நோய்கள் என்பவை மனிதர்களின் கற்பனைகள் மட்டுமே என்று உணர்ந்தவர்களுக்கு அனைத்து நோய்களும் மருந்துகளின்றியே குணமாகிவிடும்.