false
மனம்

மனதினால் உருவாகும் ஆண்மை கோளாறுகள்

மனதினால் உருவாகும் ஆண்மை கோளாறுகள். மனம் தனது அமைதியையும் சமநிலையையும் இழக்கும் போது மனிதர்களுக்கு பல வகைகளில் ஆரோக்கியப் பாதிப்புகளை உண்டாக்கிவிடுகிறது, அவற்றில் ஒன்றுதான் ஆண்மைக் கோளாறுகள். குடும்பத்திலும், வேலையிடத்திலும், சமுதாயத்திலும், சந்திக்கும் பிரச்சனைகள் அவர்களின் மனதில் பதிவாகி, மனதின் சமநிலையைப் பாதித்து, ஆண்மையின் வீரியம் குறைவதற்குக் காரணமாக இருக்கின்றன.

உடலுறவு என்பதே வாழ்க்கையை மேலும் சுவாரசியமாக்கவும், மகிழ்ச்சியுடன் மனிதர்கள் வாழ்வதற்கும் இயற்கையால் செய்யப்பட்ட ஏற்பாடுதான். உடலுறவு என்பது மனிதனுக்கு இரண்டாம் கட்ட இன்பம், அதாவது கையடக்க தொலைபேசியில் வானொலி கேட்பதைப் போன்றது. ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் துணையாக இருக்கும்போது, இருவரும் சேர்ந்து இன்பமாகவும், திருப்தியுடனும் வாழ்வதற்கு இயற்கையின் ஏற்பாடு.

மனம் சரியில்லாத வேளைகளில், நமக்கு சாப்பிடத் தோன்றுவதில்லை, பசி என்ற உணர்வே இருப்பதில்லை, மற்ற தினசரி வேலைகளிலும் ஆர்வம் இருப்பதில்லை. அடிப்படைத் தேவைகளின் மீதே நாட்டங்கள் குறையும்போது, உடலுறவில் மட்டும் எவ்வாறு நாட்டம் உண்டாகும்?

மனதின் பதிவுகளில் இருக்கும் கவலை, பயம், எரிச்சல், போன்ற தீய குணங்கள் ஆண்மை கோளாறுகளை உருவாக்கக் கூடியவை. மனதில் கவலையோ பயமோ இருக்கும் போது மனைவியுடன் கூட வேண்டும் என்ற இச்சை உருவானாலும், மனமும் உடலும் அதற்கு ஒத்துழைக்காது. அதையும் மீறி முயற்சித்தாலும் முழுமையாக ஈடுபட முடியாது. விறைப்புத் தன்மை குறைதல், விந்து முந்துதல், பாதியில் சுருங்குதல், மனதில் மற்ற சிந்தனைகள் தோன்றுதல், பயம், கவலை தோன்றுதல், உடல் வலி, சோர்வு, போன்றவை ஏற்படலாம்.

மனதுக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை அறிந்துகொள்ள சில உதாரணங்கள் சொல்கிறேன். குழந்தைகள் மிரட்டப்பட்டாலோ, பயம் உண்டானாலோ, பயத்தில் சிறுநீர் கழித்துவிடுகிறார்கள். வீட்டில் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால், அந்த குடும்ப நபர்களுக்கு பசி உணர்வு உண்டாவதில்லை. மன நிம்மதி இழந்துவிட்டால் பலருக்கு இரவில் தூக்கம் பிடிப்பதில்லை. மனதில் குழப்பங்கள் ஏற்பட்டால் சிலருக்கு உடலில் நடுக்கம் ஏற்படுகிறது, சிலருக்குக் காய்ச்சலே உருவாகிவிடுகிறது.

இவ்வாறு மனதில் உண்டாகும் மாற்றங்கள் உடலிலும் பாதிப்புகளை உருவாக்குகின்றன. அவ்வாறான பாதிப்புகளில் ஒன்றுதான், ஆண்மை கோளாறுகள். மனதில் பயமோ, எரிச்சலோ, கவலையோ, பொறாமையோ, குழப்பமோ இல்லாமல் கவனித்துக் கொண்டால் ஆண்மையின் வீரியம் மேம்படும். மனதில் அமைதியும் தைரியமும் எந்த அளவில் இருக்கிறதோ ஆண்மை வீரியம் அந்த அளவில் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *