மனம்

மனதில் தேங்கும் உணர்ச்சிகள்

woman in black collared shirt

மனதில் தேங்கும் உணர்ச்சிகள். மனதில் தேங்கும் உணர்ச்சிகளால் உருவாகக்கூடிய தொந்தரவுகள். மனித மனதினில் தேங்கக்கூடிய ஒவ்வொரு எதிர்மறை உணர்ச்சியும் உடலில் சில பாதிப்புகளை உருவாக்கக்கூடும். மனதில் உணர்ச்சிகள் தோன்றுவதும் பின் மறைவதும் மனித இயல்புதான்; ஆனால் தோன்றிய உணர்ச்சிகள் மறையாமல் மனதிலேயே தேக்கம் கொள்ளும்போதும்; பல நாட்களுக்கு தொடர்ந்து மீண்டும் மீண்டும் தோன்றும் போதும்; அவை உடலின் உறுப்புகளைப் பாதித்து, நோய்களை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன.

உணர்ச்சிகளும் அவை பாதிக்கும் உடலின் பகுதிகளும்

உணர்ச்சிகள்பாதிக்கும் உறுப்புகள்
ஆணவம், கர்வம், திமிர், தற்பெருமைஇதயம், சிறுகுடல், இரத்த நாளங்கள், மூட்டுக்கள், நாக்கு
கவலை, துக்கம்மண்ணீரல், வயிறு, தசைகள், இடுப்பு, கீழ் உதடு
ஏக்கம், பற்றுநுரையீரல், பெருங்குடல், தோல், முடி, மூக்கு, தோள்பட்டை
அச்சம், பயம், காமம்சிறுநீரகம், சிறுநீர்ப்பை, எலும்புகள், கர்ப்பப்பை, ஆண்மை, காது
பொறாமை, எரிச்சல், கோபம்கல்லீரல், பித்தப்பை, தசை நார்கள், கண்கள்

மேலே கூறப்பட்ட உணர்ச்சிகள் அதன் தொடர்புடைய உறுப்புகளையும், உடலின் பகுதிகளையும், பாதிப்புக்குள்ளாக்கி, அவற்றைப் பலவீனமாக்கி, அவற்றில் நோய்களைத் தோன்றச் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இவைப் போன்ற உணர்ச்சிகள் அடிக்கடி தோன்றக் கூடியவர்கள், இவ்வாறான உணர்ச்சிகள் தோன்றக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்து, அவ்வாறான உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய, உருவாக்கக் கூடிய செயல்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்ட உறுப்புகளில் சக்தி குறைவுகள் ஏற்பட்டாலோ அல்லது கழிவுகள், இரசாயனங்கள் தேக்கம் கொண்டாலோ, அதன் தொடர்பான குணங்களும் உணர்ச்சிகளும் உருவாக வாய்ப்புகள் உள்ளன.

மேலே குறிப்பிட்ட உடல் தொந்தரவுகளும், பாதிப்புகளும் உள்ளவர்கள்; அவற்றுடன் தொடர்புடைய குணங்களும், உணர்ச்சிகளும் அவர்களிடம் இருக்கின்றனவா என்பதைப் பார்த்து, ஆராய்ந்து அவற்றை மாற்றிக் கொண்டால்; உடல் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியம் மேம்படும். மேலே குறிப்பிட்ட குணங்கள் அதன் தொடர்புடைய உறுப்புகள் மட்டுமல்லாமல் மற்ற உறுப்புகளையும் பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.

மனித உடலில் எந்த பாகம் சீர் கெட்டாலும், எந்த நோய் தோன்றினாலும், மனம் மட்டும் நம்பிக்கையை இழக்காமல் தைரியமாக இருந்தால்; உடலின் அத்தனை தொந்தரவுகளில் இருந்தும் மீண்டு நல்ல சுகம் பெறலாம். மனதின் பதிவுகளும், நம்பிக்கைகளுமே ஒரு மனிதனின் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. மனம் மாசு படாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனதை எந்த நேரத்திலும் அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். வாழ்க்கை மைட்ச்சியானதாக இருக்கும்.

Leave feedback about this

  • Rating

PROS

+
Add Field

CONS

+
Add Field

X